• Nov 05 2026

புத்தளம் உடப்பு அறுவாய் மீண்டும் மூடப்பட்டது – மீனவர்களுக்கு கிடைத்த பெரும் மீன் அறுவடை!

Chithra / Nov 3rd 2026, 4:00 pm
image


புத்தளம் உடப்பு பகுதியில் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி திறக்கப்பட்ட அறுவாய், நீர்மட்டம் குறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (03) இயற்கையாகவே மூடப்பட்டுள்ளது.


சிறுகடலில் தேங்கியிருந்த அதிகளவான வெள்ள நீரை கடலுக்கு வெளியேற்றும் நோக்கில் இந்த அறுவாய் திறக்கப்பட்டிருந்தது.


சுமார் 10 நாட்களாகத் திறந்திருந்த அறுவாய் ஊடாக வெள்ள நீர் கடலுக்குச் சென்றதால், அப்பகுதியை அண்மித்த கிராமங்கள் பாரிய வெள்ள அனர்த்தத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, கடல் நீர் ஏற்றம் காரணமாக அறுவாய் பகுதியில் பல்வேறு வகையான மீன்கள் அதிகளவில் வருகை தந்துள்ளன.


இதனைப் பயன்படுத்திக் கொண்ட மீனவர்கள் வீச்சு வலைகளைப் பயன்படுத்தி மணலை மீன், செத்தல் மீன், ஜப்பான் மீன், கெழுத்தி மீன் உள்ளிட்ட பல வகையான மீன்களைப் பெருமளவில் பிடித்துள்ளனர்.


இதன் மூலம் மீனவர்கள் கணிசமான வருமானத்தையும் ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் உடப்பு அறுவாய் மீண்டும் மூடப்பட்டது – மீனவர்களுக்கு கிடைத்த பெரும் மீன் அறுவடை புத்தளம் உடப்பு பகுதியில் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி திறக்கப்பட்ட அறுவாய், நீர்மட்டம் குறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (03) இயற்கையாகவே மூடப்பட்டுள்ளது.சிறுகடலில் தேங்கியிருந்த அதிகளவான வெள்ள நீரை கடலுக்கு வெளியேற்றும் நோக்கில் இந்த அறுவாய் திறக்கப்பட்டிருந்தது.சுமார் 10 நாட்களாகத் திறந்திருந்த அறுவாய் ஊடாக வெள்ள நீர் கடலுக்குச் சென்றதால், அப்பகுதியை அண்மித்த கிராமங்கள் பாரிய வெள்ள அனர்த்தத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, கடல் நீர் ஏற்றம் காரணமாக அறுவாய் பகுதியில் பல்வேறு வகையான மீன்கள் அதிகளவில் வருகை தந்துள்ளன.இதனைப் பயன்படுத்திக் கொண்ட மீனவர்கள் வீச்சு வலைகளைப் பயன்படுத்தி மணலை மீன், செத்தல் மீன், ஜப்பான் மீன், கெழுத்தி மீன் உள்ளிட்ட பல வகையான மீன்களைப் பெருமளவில் பிடித்துள்ளனர்.இதன் மூலம் மீனவர்கள் கணிசமான வருமானத்தையும் ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement