• May 19 2024

அடுத்த 5 மாதங்களுக்குள் தொடருந்து டிக்கெட்டுகளுக்கு QR குறியீடு..! வெளியான அறிவிப்பு

Chithra / Apr 8th 2024, 9:33 am
image

Advertisement

 

இந்தாண்டுக்குள் தொடருந்து பயணங்களுக்கு ஈ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள பொது மேலாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார தெரிவித்துள்ளார்.

19 மில்லியன் டொலர் செலவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில காலமாக நடைமுறைப்படுத்தப்படாத இத்திட்டத்தின் பணிகளை துரிதப்படுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய, இந்த திட்டப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக, அடுத்த 5 மாதங்களுக்குள் தொடருந்து டிக்கெட்டுகளுக்கு QR குறியீடு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த 5 மாதங்களுக்குள் தொடருந்து டிக்கெட்டுகளுக்கு QR குறியீடு. வெளியான அறிவிப்பு  இந்தாண்டுக்குள் தொடருந்து பயணங்களுக்கு ஈ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள பொது மேலாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார தெரிவித்துள்ளார்.19 மில்லியன் டொலர் செலவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த சில காலமாக நடைமுறைப்படுத்தப்படாத இத்திட்டத்தின் பணிகளை துரிதப்படுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.அதற்கமைய, இந்த திட்டப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார தெரிவித்துள்ளார்.முதல் கட்டமாக, அடுத்த 5 மாதங்களுக்குள் தொடருந்து டிக்கெட்டுகளுக்கு QR குறியீடு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement