• Apr 21 2026

எரிபொருள் விநியோகத்தில் இனி QR கட்டாயம் - அரசாங்கம் அதிரடி முடிவு

Chithra / Apr 21st 2026, 6:51 pm
image

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா கருத்து தெரிவிக்கையில்,


உலகளாவிய எரிபொருள் நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, தற்போதைய QR குறியீடு முறையின் கீழேயே சில்லறை எரிபொருள் விநியோகம் தொடரும். எவ்வாறாயினும், தேவைக்கேற்ப இந்த முறையில் மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.


மேலும், எதிர்காலத்தில் கொடுப்பனவு முறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குதல், வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப வழங்கப்படும் எரிபொருள் அளவை அவ்வப்போது திருத்தம் செய்தல், சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவது குறித்துப் பரிசீலித்தல் போன்ற திட்டங்கள் அமுல்ப்படுத்தப்படும்.


உலகளாவிய விநியோகத் தடைகள் இருந்தபோதிலும், உள்நாட்டுச் சந்தையில் தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.


சாத்தியமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொருட்டு இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் இருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எரிபொருள் விநியோகத்தில் இனி QR கட்டாயம் - அரசாங்கம் அதிரடி முடிவு இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா கருத்து தெரிவிக்கையில்,உலகளாவிய எரிபொருள் நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, தற்போதைய QR குறியீடு முறையின் கீழேயே சில்லறை எரிபொருள் விநியோகம் தொடரும். எவ்வாறாயினும், தேவைக்கேற்ப இந்த முறையில் மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.மேலும், எதிர்காலத்தில் கொடுப்பனவு முறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குதல், வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப வழங்கப்படும் எரிபொருள் அளவை அவ்வப்போது திருத்தம் செய்தல், சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவது குறித்துப் பரிசீலித்தல் போன்ற திட்டங்கள் அமுல்ப்படுத்தப்படும்.உலகளாவிய விநியோகத் தடைகள் இருந்தபோதிலும், உள்நாட்டுச் சந்தையில் தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.சாத்தியமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொருட்டு இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் இருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement