• Apr 26 2024

பிக்பாஸ் வீட்டிலிருந்து இருந்து அதிரடியாக வெளியேறிய குயின்சி!

Sharmi / Dec 2nd 2022, 9:52 pm
image

Advertisement

பிக்பாஸ் சீசன்6 தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் இந்தவாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறுவார்கள் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


இவ்வாறான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து  சற்றுமுன்னர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் குயின்சி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுக்கான பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையிலேயே குயின்சி வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த வாரம் நாமினேசன் பட்டியலில் கதிரவன், ரக்ஷிதா,ஜனனி, மைனா, தனலட்சுமி மற்றும் குயின்சி ஆகிய 6 போட்டியாளர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.


நேற்று வரை பதிவான வாக்குகளின் அடிப்படையில்  மைனா மற்றும் குயின்சி ஆகிய இருவருமே மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருந்தனர்.

இதனால், இந்த வாரம் டபுள் ஏவிக்ஷனுக்கு வாய்ப்புள்ளதாக சில தகவல் பரவியது. எனினும், தற்போது கிடைத்த தகவலின் படி இந்த வாரமும் வழக்கம் போல் ஒரே ஒரு போட்டியாளர் மட்டுமே வெளியேறியுள்ளார்.


மக்களின் வாக்குகள் அடிப்படையில் குயின்சி தான் மிகவும் குறைவாக வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வைரலாகி வருகின்றது.



பிக்பாஸ் வீட்டிலிருந்து இருந்து அதிரடியாக வெளியேறிய குயின்சி பிக்பாஸ் சீசன்6 தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்தவாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறுவார்கள் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இவ்வாறான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து  சற்றுமுன்னர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் குயின்சி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுக்கான பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.இந்நிலையிலேயே குயின்சி வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த வாரம் நாமினேசன் பட்டியலில் கதிரவன், ரக்ஷிதா,ஜனனி, மைனா, தனலட்சுமி மற்றும் குயின்சி ஆகிய 6 போட்டியாளர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.நேற்று வரை பதிவான வாக்குகளின் அடிப்படையில்  மைனா மற்றும் குயின்சி ஆகிய இருவருமே மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருந்தனர்.இதனால், இந்த வாரம் டபுள் ஏவிக்ஷனுக்கு வாய்ப்புள்ளதாக சில தகவல் பரவியது. எனினும், தற்போது கிடைத்த தகவலின் படி இந்த வாரமும் வழக்கம் போல் ஒரே ஒரு போட்டியாளர் மட்டுமே வெளியேறியுள்ளார்.மக்களின் வாக்குகள் அடிப்படையில் குயின்சி தான் மிகவும் குறைவாக வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement