• Oct 30 2024

ஜனாதிபதியின் மாற்றம் பொருட்களின் விலையேற்றமே-இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டு..!

Sharmi / Oct 23rd 2024, 9:33 am
image

Advertisement

நாட்டின் சந்தையில் தற்பொழுது தேங்காய், பாக்கு, முட்டை உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவா? என ஐக்கிய மக்கள் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலை இலக்காக கொண்டு நேற்று(22) மாலை நுவரெலியா-நானுஓயா காந்தி கலாச்சார மண்டபத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணனின் தலைமையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இக்கூட்டம் இடம்பெற்றது. 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள், தோட்டத் தலைவர்கள், தலைவிமார்கள், இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இராதாகிருஷ்ணன்  இவ்வாறு தெரிவித்தார்.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் செய்தவர்களை பிடிப்பதாக ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் இன்று வரை அதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

அத்தோடு தற்பொழுது சந்தையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. முட்டை ஒன்று 30 ரூபாய்க்கு தருவதாக சொன்னார்கள். ஆனால் தற்பொழுது 50 ரூபாய்க்கு அதிகமான விலையில் முட்டை ஒன்று விற்பனை செய்யப்படுகிறது.

அத்தோடு ஜனாதிபதி கூறியிருந்தார். தன்னிடம் ஊழல் செய்த அரசியல்வாதிகளின் கோப்புகள்  அதிகமாக இருப்பதாகவும், அதனை தான் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று வரை அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தற்பொழுது மலையகப் பகுதியில் உள்ள மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தது தவறு என அநேகமானவர்கள் சொல்கிறார்கள். தமிழ் பிரதிநிதித்துவம் கட்டாயம் தேவை அதற்கு நாங்கள் வாக்களிப்போம் என பலரும் தற்பொழுது உணர்ந்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடக் கூடியவர்கள் எவருமே மக்களுக்கு நன்கு பரீட்சியம் ஆனவர்கள் கிடையாது.

ஆகையால் மக்கள் இப்பொழுது தெளிவாக இருக்கிறார்கள். அத்தோடு தேர்தல் மறுசீரமைப்பு வந்தால் உங்களுக்கு தெரியும் நுவரெலியா மாவட்டத்தை பொருத்தவரையில் மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 2 ஆசனங்களை மட்டுமே பெற முடியும். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் குறைந்தபட்சம் ஐந்து ஆசனங்களையாவது பெற முடியும். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையிலும் இதை ஒழிப்பதற்கு தற்பொழுது அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.

அத்தோடு உங்களுக்குத் தெரியும் கோட்டாபய அரசாங்கம் ஒரே நாளில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியிருந்தது. இதனால் நாட்டின் உற்பத்தி குறைந்து பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தது. அதன் ஒரு நடவடிக்கையாக தான் அவரின் ஆட்சி மாற்றத்திற்கு உள்ளாகி இருந்தது என தெரிவித்தார்.


ஜனாதிபதியின் மாற்றம் பொருட்களின் விலையேற்றமே-இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டு. நாட்டின் சந்தையில் தற்பொழுது தேங்காய், பாக்கு, முட்டை உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவா என ஐக்கிய மக்கள் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.பொதுத்தேர்தலை இலக்காக கொண்டு நேற்று(22) மாலை நுவரெலியா-நானுஓயா காந்தி கலாச்சார மண்டபத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணனின் தலைமையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இக்கூட்டம் இடம்பெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள், தோட்டத் தலைவர்கள், தலைவிமார்கள், இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இராதாகிருஷ்ணன்  இவ்வாறு தெரிவித்தார்.ஈஸ்டர் குண்டு தாக்குதல் செய்தவர்களை பிடிப்பதாக ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் இன்று வரை அதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.அத்தோடு தற்பொழுது சந்தையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. முட்டை ஒன்று 30 ரூபாய்க்கு தருவதாக சொன்னார்கள். ஆனால் தற்பொழுது 50 ரூபாய்க்கு அதிகமான விலையில் முட்டை ஒன்று விற்பனை செய்யப்படுகிறது.அத்தோடு ஜனாதிபதி கூறியிருந்தார். தன்னிடம் ஊழல் செய்த அரசியல்வாதிகளின் கோப்புகள்  அதிகமாக இருப்பதாகவும், அதனை தான் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.ஆனால் இன்று வரை அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தற்பொழுது மலையகப் பகுதியில் உள்ள மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தது தவறு என அநேகமானவர்கள் சொல்கிறார்கள். தமிழ் பிரதிநிதித்துவம் கட்டாயம் தேவை அதற்கு நாங்கள் வாக்களிப்போம் என பலரும் தற்பொழுது உணர்ந்துள்ளனர்.தேசிய மக்கள் சக்தியில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடக் கூடியவர்கள் எவருமே மக்களுக்கு நன்கு பரீட்சியம் ஆனவர்கள் கிடையாது.ஆகையால் மக்கள் இப்பொழுது தெளிவாக இருக்கிறார்கள். அத்தோடு தேர்தல் மறுசீரமைப்பு வந்தால் உங்களுக்கு தெரியும் நுவரெலியா மாவட்டத்தை பொருத்தவரையில் மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 2 ஆசனங்களை மட்டுமே பெற முடியும். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் குறைந்தபட்சம் ஐந்து ஆசனங்களையாவது பெற முடியும். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையிலும் இதை ஒழிப்பதற்கு தற்பொழுது அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.அத்தோடு உங்களுக்குத் தெரியும் கோட்டாபய அரசாங்கம் ஒரே நாளில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியிருந்தது. இதனால் நாட்டின் உற்பத்தி குறைந்து பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தது. அதன் ஒரு நடவடிக்கையாக தான் அவரின் ஆட்சி மாற்றத்திற்கு உள்ளாகி இருந்தது என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement