• Feb 13 2025

நுவரெலியாவில் அதிரடி சுற்றிவளைப்பு; வசமாக சிக்கிய பெண்கள் உட்பட அறுவர்

Chithra / Feb 12th 2025, 3:29 pm
image


நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து நான்கு  பெண்கள் உட்பட ஆறு பேர் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பொலிஸாருக்கு  கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, நுவரெலியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெலிமடை, இரத்தினபுரி மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21, 25, 34 மற்றும் 34 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்டவர்களில் விபச்சார விடுதியின் நிர்வாகத்துடன் தொடர்புடைய இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தி, பின்னர் அவர்களை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

நுவரெலியாவில் அதிரடி சுற்றிவளைப்பு; வசமாக சிக்கிய பெண்கள் உட்பட அறுவர் நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து நான்கு  பெண்கள் உட்பட ஆறு பேர் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.நுவரெலியா பொலிஸாருக்கு  கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, நுவரெலியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெலிமடை, இரத்தினபுரி மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21, 25, 34 மற்றும் 34 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.கைது செய்யப்பட்டவர்களில் விபச்சார விடுதியின் நிர்வாகத்துடன் தொடர்புடைய இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தி, பின்னர் அவர்களை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement