வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றையதினம் இரவு முதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது தொடர்பில் குறித்த திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்றிரவு (24) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இரவில் மழை பெய்யும்.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது (30-40) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று முதல் மழை. வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றையதினம் இரவு முதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இது தொடர்பில் குறித்த திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்றிரவு (24) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இரவில் மழை பெய்யும்.மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் பலத்த மழை பெய்யக்கூடும்.வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது (30-40) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்.இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.