பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அரச உத்தியோகத்தர் ஒருவரை அவமதிக்கும் வகையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் நடந்துகொள்வதாகவும் அதை நிறுத்த வேண்டும் எனவும் வேலணை பிரதேச சபையின் தலைவர் சிவலிங்கம் அசோக்குமார் சுட்டிக்காட்டியதால் வேலணை பிரதேச ஒருங்கிணை குழு கூட்டத்க்தில் சில நிமிடங்கள் குழப்ப நிலை ஏற்பட்டது.
வேலணை பிரதேசத்தின் இவ்வாண்டுக்காண இறுதி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (24) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்ட நிலையில் புங்குடுதீவு பிரதேச பெண் ஒருவர் தனக்கு "டித்வா" புயல் இழப்பிட்டில் தவறிழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரிடம் முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் அப் பெண்ணின் கோரிக்கைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் குறித்த பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் குறித்த பெண் இருவரையும் பலர் முன்னிலையில் எழுப்பி அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டார்.
இதன்போது குறித்த பெண் அனர்த்தம் ஏற்பட்ட காலத்துக்கு முன்பே குறித்த வீட்டில் வசித்திருக்கவில்லை என்றும் அதனால் அவர் உள்வாங்கப்படவில்லை என்றும் கிராம சேவகர் பதிலளித்தார்.
ஆனால் குறித்த பெண் தான் அனர்த்தம் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய பிறிதொரு இடத்தில் சென்று பாதுகாப்பு கருதி வாழ்ந்ததாகவும் தனது வீடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது கிராம சேவகருக்கு தெரிந்தும் அவர் தன்னை புறக்கணித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி தனது கருத்தை முன்வைத்தார்.
ஆனாலும் கிராம உத்தியோகத்தர் மீது அதிகளவான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் வகையில் விசாரணை நகர்ந்த நிலையில் பொது அமைப்புகளின் சில பிரதிநிதிகள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தவிசாளர் அசோக்குமார் நேரடியாகவே குறித்த விசாரணை இவ்விடத்தில் அதாவது பொதுவெளியில் முன்னெடுப்பது அநாவசியமானதொன்றெனவும், இதனால் அரச உத்தியோகத்தரது கௌரவம் கேள்விக்குட்படுத்தபடுவதுடன் அவரை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டி அந்த விசாரணையை பிரதேச செயலர் மட்டத்தில் பிரத்தியேகமாக முன்னெடுப்பது சிறந்தது எனவும், விசாரணையை நிறுத்துமாறு வலியுறுத்தினார்.
இறுதியில் கிராம உத்தியோகத்தரது செயற்பாடு சரியானது என்ற தீர்மானம் வலுப்பெற்றதால் அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் கரவொலி எழுப்பியிருந்தனர்.
இச்செயற்பாட்டால் சற்று ஆவேசமடைந்த பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவர் தனது வியாக்கியானத்தை தொடர்ந்ததால் இருவரிடையே சில நிமிடம் பரஸ்பர கருத்தாடல் தொடர்ந்தது.
பின்னர் அவ்விடயத்தை பிரதேச செயலகம் ஏற்றுக்கொள்ளாது எனக் கூறி நிராகரித்ததை அடுத்து குழுநிலை முடிவுக்கு வந்தது.
கிராம சேவகரை அவமானப்படுத்தும் வகையில் செயற்பட்ட ரஜீவன் எம்.பி; வேலணை பிரதேச சபையில் குழப்ப நிலை பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அரச உத்தியோகத்தர் ஒருவரை அவமதிக்கும் வகையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் நடந்துகொள்வதாகவும் அதை நிறுத்த வேண்டும் எனவும் வேலணை பிரதேச சபையின் தலைவர் சிவலிங்கம் அசோக்குமார் சுட்டிக்காட்டியதால் வேலணை பிரதேச ஒருங்கிணை குழு கூட்டத்க்தில் சில நிமிடங்கள் குழப்ப நிலை ஏற்பட்டது.வேலணை பிரதேசத்தின் இவ்வாண்டுக்காண இறுதி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (24) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் நடைபெற்றது.இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்ட நிலையில் புங்குடுதீவு பிரதேச பெண் ஒருவர் தனக்கு "டித்வா" புயல் இழப்பிட்டில் தவறிழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரிடம் முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை வழங்கியிருந்தார்.இந்நிலையில் அப் பெண்ணின் கோரிக்கைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் குறித்த பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் குறித்த பெண் இருவரையும் பலர் முன்னிலையில் எழுப்பி அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டார்.இதன்போது குறித்த பெண் அனர்த்தம் ஏற்பட்ட காலத்துக்கு முன்பே குறித்த வீட்டில் வசித்திருக்கவில்லை என்றும் அதனால் அவர் உள்வாங்கப்படவில்லை என்றும் கிராம சேவகர் பதிலளித்தார்.ஆனால் குறித்த பெண் தான் அனர்த்தம் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய பிறிதொரு இடத்தில் சென்று பாதுகாப்பு கருதி வாழ்ந்ததாகவும் தனது வீடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது கிராம சேவகருக்கு தெரிந்தும் அவர் தன்னை புறக்கணித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி தனது கருத்தை முன்வைத்தார்.ஆனாலும் கிராம உத்தியோகத்தர் மீது அதிகளவான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் வகையில் விசாரணை நகர்ந்த நிலையில் பொது அமைப்புகளின் சில பிரதிநிதிகள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் தவிசாளர் அசோக்குமார் நேரடியாகவே குறித்த விசாரணை இவ்விடத்தில் அதாவது பொதுவெளியில் முன்னெடுப்பது அநாவசியமானதொன்றெனவும், இதனால் அரச உத்தியோகத்தரது கௌரவம் கேள்விக்குட்படுத்தபடுவதுடன் அவரை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டி அந்த விசாரணையை பிரதேச செயலர் மட்டத்தில் பிரத்தியேகமாக முன்னெடுப்பது சிறந்தது எனவும், விசாரணையை நிறுத்துமாறு வலியுறுத்தினார்.இறுதியில் கிராம உத்தியோகத்தரது செயற்பாடு சரியானது என்ற தீர்மானம் வலுப்பெற்றதால் அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் கரவொலி எழுப்பியிருந்தனர்.இச்செயற்பாட்டால் சற்று ஆவேசமடைந்த பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவர் தனது வியாக்கியானத்தை தொடர்ந்ததால் இருவரிடையே சில நிமிடம் பரஸ்பர கருத்தாடல் தொடர்ந்தது.பின்னர் அவ்விடயத்தை பிரதேச செயலகம் ஏற்றுக்கொள்ளாது எனக் கூறி நிராகரித்ததை அடுத்து குழுநிலை முடிவுக்கு வந்தது.