• Feb 24 2025

இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

Tharmini / Feb 23rd 2025, 5:28 pm
image

இராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 32 மீனவர்களையும் ஐந்து விசைப்படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மீனவர்களின் கைது நடவடிக்கை கண்டித்து இன்று (23) முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்துள்ளனர்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 450 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

 மீனவர்கள் இலங்கை மன்னார்  வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஐந்து விசைப்படகையும் அதிலிருந்த 32 மீனவர்களையும் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு பின்னர் மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இன்று (23) கைது செய்யப்பட்ட 32 மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

 மீனவர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 700க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன் 10,000 மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

 இந்த தொடர் வேலை நிறுத்தம் காரணமாக தினசரி சுமார் ஒரு கோடி ரூபாய் அந்நிய செலவாணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக மீனவர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று நடவடிக்கை எடுக்கா விட்டால் ஓரிரு நாட்களில் தமிழக கடலோர மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்த இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் இராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 32 மீனவர்களையும் ஐந்து விசைப்படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.மீனவர்களின் கைது நடவடிக்கை கண்டித்து இன்று (23) முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்துள்ளனர்.இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 450 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் இலங்கை மன்னார்  வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஐந்து விசைப்படகையும் அதிலிருந்த 32 மீனவர்களையும் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு பின்னர் மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.இதனையடுத்து ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.இன்று (23) கைது செய்யப்பட்ட 32 மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். மீனவர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 700க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன் 10,000 மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த தொடர் வேலை நிறுத்தம் காரணமாக தினசரி சுமார் ஒரு கோடி ரூபாய் அந்நிய செலவாணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக மீனவர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று நடவடிக்கை எடுக்கா விட்டால் ஓரிரு நாட்களில் தமிழக கடலோர மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்த இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement