• Nov 28 2024

சஜித் வெற்றி பெறுவதை விரும்பாத ரணில் திட்டமிட்டு நெருக்கடிகளை ஏற்படுத்தினார் - மரிக்கார் பகிரங்க குற்றச்சாட்டு

Chithra / Oct 28th 2024, 10:08 am
image

 


ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டோம். சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகுவதை ரணில் விக்கிரமசிங்க விரும்பாததால் திட்டமிட்ட வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தினார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

தெஹிவளை பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நடுத்தர மக்களின் நலன் பற்றி பேசும் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக கூடாது என்ற நோக்கத்தில் தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார். 

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுடன் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவை தோற்கடித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் ஜனாதிபதி மறந்து விட்டார். 

ராஜபக்ஷர்கள் உகாண்டாவில் மறைத்து வைத்துள்ள நிதியை இலங்கைக்கு கொண்டு வருவதாக  குறிப்பிட்டனர். உகாண்டா விவகாரம் தேர்தல் மேடை பிரச்சாரம் மாத்திரமே என்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுசீரமைப்பதாகவும், உணவு மற்றும் சுகாதார சேவைகளுக்கு விதித்துள்ள வற் வரியை இரத்து செய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டார். 

ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதிய செயற்திட்டத்தை எவ்வித மாற்றமுமில்லாமல் முன்னெடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். 

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் 20 இலட்சம் ஆதரவாளர்கள் வாக்களித்தார்கள். 

அவர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க வேண்டும். என்றார்.

சஜித் வெற்றி பெறுவதை விரும்பாத ரணில் திட்டமிட்டு நெருக்கடிகளை ஏற்படுத்தினார் - மரிக்கார் பகிரங்க குற்றச்சாட்டு  ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டோம். சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகுவதை ரணில் விக்கிரமசிங்க விரும்பாததால் திட்டமிட்ட வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தினார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.தெஹிவளை பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.நடுத்தர மக்களின் நலன் பற்றி பேசும் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக கூடாது என்ற நோக்கத்தில் தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார். தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுடன் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவை தோற்கடித்தார்.ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் ஜனாதிபதி மறந்து விட்டார். ராஜபக்ஷர்கள் உகாண்டாவில் மறைத்து வைத்துள்ள நிதியை இலங்கைக்கு கொண்டு வருவதாக  குறிப்பிட்டனர். உகாண்டா விவகாரம் தேர்தல் மேடை பிரச்சாரம் மாத்திரமே என்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுசீரமைப்பதாகவும், உணவு மற்றும் சுகாதார சேவைகளுக்கு விதித்துள்ள வற் வரியை இரத்து செய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டார். ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதிய செயற்திட்டத்தை எவ்வித மாற்றமுமில்லாமல் முன்னெடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் 20 இலட்சம் ஆதரவாளர்கள் வாக்களித்தார்கள். அவர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க வேண்டும். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement