• Sep 19 2024

மாகாண சபைகளுக்கு முக்கிய அதிகாரங்களை வழங்கத் தயாராகும் ரணில்!

Sharmi / Jan 23rd 2023, 11:29 am
image

Advertisement

பதின்மூன்றாவது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்நாட்டுக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் ஜனாதிபதியை சந்தித்த பின்னர், கடந்த 20ஆம் திகதி திடீரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய காணி ஆணைக்குழு தொடர்பான வரைவு தயாரிக்கப்பட்டு வருகின்றதுடன், அந்த வரைவு நிறைவேற்றப்பட்டவுடன் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு மாற்றப்படும், ஒன்பது மாகாணங்களுக்கு ஒன்பது பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்படுவர், மேலும் 10 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படவுள்ளனர். கொழும்பு மெட்ரோ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவர்கள் மாகாண சபைகளின் அதிகாரத்தின் கீழ் நியமிக்கப்படுவார்கள்.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு பல தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த போதிலும் சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் மட்டும்தான் கலந்து கொண்டிருந்தனர்..

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 10ஆம் திகதி ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பமானது, அங்கு தமிழ் கட்சிகளின் அடிப்படை கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, போரினால் காணாமற்போனோர் பிரச்சினை, வடக்கு கிழக்கு காணிப்பிரச்சினை, நியாயமான முன்னேற்றம் ஏற்படாவிடின் தமது அடிப்படைக் கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வுகளை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்திருந்தன. அந்தத் தீர்வுகளுக்காக மீண்டும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.அது பரிசீலிக்கப்பட வேண்டும்.

இதனிடையே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கர் அண்மையில் நாட்டிற்கு விஜயம் செய்து ஜனாதிபதி மற்றும் இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைகளுக்கு முக்கிய அதிகாரங்களை வழங்கத் தயாராகும் ரணில் பதின்மூன்றாவது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்நாட்டுக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் ஜனாதிபதியை சந்தித்த பின்னர், கடந்த 20ஆம் திகதி திடீரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.தேசிய காணி ஆணைக்குழு தொடர்பான வரைவு தயாரிக்கப்பட்டு வருகின்றதுடன், அந்த வரைவு நிறைவேற்றப்பட்டவுடன் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு மாற்றப்படும், ஒன்பது மாகாணங்களுக்கு ஒன்பது பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்படுவர், மேலும் 10 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படவுள்ளனர். கொழும்பு மெட்ரோ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவர்கள் மாகாண சபைகளின் அதிகாரத்தின் கீழ் நியமிக்கப்படுவார்கள்.இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு பல தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த போதிலும் சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் மட்டும்தான் கலந்து கொண்டிருந்தனர்.இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 10ஆம் திகதி ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பமானது, அங்கு தமிழ் கட்சிகளின் அடிப்படை கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டது.தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, போரினால் காணாமற்போனோர் பிரச்சினை, வடக்கு கிழக்கு காணிப்பிரச்சினை, நியாயமான முன்னேற்றம் ஏற்படாவிடின் தமது அடிப்படைக் கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வுகளை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்திருந்தன. அந்தத் தீர்வுகளுக்காக மீண்டும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.அது பரிசீலிக்கப்பட வேண்டும்.இதனிடையே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கர் அண்மையில் நாட்டிற்கு விஜயம் செய்து ஜனாதிபதி மற்றும் இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement