• Sep 19 2024

தமிழர்கள் பரந்து வாழும் இடங்களில் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு குளிர்காய முற்படுகின்றார் ரணில் - அநுர பகிரங்கக் குற்றச்சாட்டு! samugammedia

Tamil nila / Aug 23rd 2023, 7:27 pm
image

Advertisement

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் எனத் தமிழர்கள் பரந்து வாழும் பிரதேசங்களில் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு மக்களைச் சூடாக்கி அதில் குளிர்காய முற்படுகின்றார்." 

இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டினார்.

தனது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காக சிறுபான்மை - பெரும்பான்மை இனங்களுக்கிடையில் வன்முறையைத் தூண்டக் கூடிய வகையில் கருத்துக்களை வெளியிடும் இனவாதிகளையும், அடாவடிக் குழுவினரையும் ஜனாதிபதி பயன்படுத்தி வருகின்றார் என்றும் அநுரகுமார எம்.பி. சுட்டிக்காட்டினார்.

அவர்  மேலும் தெரிவிக்கையில்,

"ஜனாதிபதித் தேர்தலையொட்டியே இந்த மோசமான செயல்களில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபடுகின்றார். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் அடாவடித்தனங்களைத் தற்காலிகமாக நிறுத்தி விட்டு வாக்கு வங்கியைப் பலப்படுத்துவதே ரணிலின் திட்டமாகும். எனவே, மூவின மக்களும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஜனாதிபதி ரணிலுக்குப் பந்தம் பிடிக்கும் அரசியல் பிரதிநிதிகளும் இதை உணர்ந்து செயற்பட வேண்டும்." - என்றார்.


தமிழர்கள் பரந்து வாழும் இடங்களில் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு குளிர்காய முற்படுகின்றார் ரணில் - அநுர பகிரங்கக் குற்றச்சாட்டு samugammedia "ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் எனத் தமிழர்கள் பரந்து வாழும் பிரதேசங்களில் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு மக்களைச் சூடாக்கி அதில் குளிர்காய முற்படுகின்றார்." இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டினார்.தனது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காக சிறுபான்மை - பெரும்பான்மை இனங்களுக்கிடையில் வன்முறையைத் தூண்டக் கூடிய வகையில் கருத்துக்களை வெளியிடும் இனவாதிகளையும், அடாவடிக் குழுவினரையும் ஜனாதிபதி பயன்படுத்தி வருகின்றார் என்றும் அநுரகுமார எம்.பி. சுட்டிக்காட்டினார்.அவர்  மேலும் தெரிவிக்கையில்,"ஜனாதிபதித் தேர்தலையொட்டியே இந்த மோசமான செயல்களில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபடுகின்றார். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் அடாவடித்தனங்களைத் தற்காலிகமாக நிறுத்தி விட்டு வாக்கு வங்கியைப் பலப்படுத்துவதே ரணிலின் திட்டமாகும். எனவே, மூவின மக்களும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஜனாதிபதி ரணிலுக்குப் பந்தம் பிடிக்கும் அரசியல் பிரதிநிதிகளும் இதை உணர்ந்து செயற்பட வேண்டும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement