• Sep 20 2024

ரணில் 13 என்று கூறுவதும்; பிக்குகள் அதனை பேரணியாக வந்து எரிப்பதும் அரசியல் நாடகமே! - அருட்தந்தை சக்திவேல்

Chithra / Feb 9th 2023, 11:27 am
image

Advertisement

பிக்குகள் நேற்று (8.2.2023) பேரணி நடாத்தி அரசியல் யாப்பின் 13 ஆம் திருத்தத்தை வீதியில் தீட்டு எரித்திருக்கின்றார்கள். அவர்கள் எரித்து பௌத்தத்தையே. பிக்குகளின் அரசியலுக்குப் பின்னால் உள்ள அரசியல் சக்தியே அதற்கு காரணமாகும்  என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

ராஜீவ் காந்தி-ஜே.ஆர் ஒப்பந்தத்தை 36 வருடங்களுக்கு முன்னரே  தமிழர்கள் தமது அரசியல் தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. 13 ம் திருத்தத்தோடு உருவான மாகாண சபையையும்  ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரும் அதனை தீர்வாக முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கும் எவரும் ஆயத்தம் இல்லை. 

கொழம்பு அரசியல்வாதியான திரு.மனோ கணேசன் மட்டுமே இது அரசியல் தீர்வுக்காண ஆரம்பப் புள்ளி என கூறிக் கொண்டிருக்கின்றார்.

இத்தகைய சூழ்நிலையில் ரணில் 13 என்று கூறுவதும்; பிக்குகள் அதனை பேரணியாக வந்து எரிப்பதும் அரசியல் நாடகமே அன்றி வேரில்லை. சீன சார்பு  குழுவினரின் ஆதரவோடும்,  இந்திய மற்றும் மேற்குலக்கு சார்பு ஆதரவோடுமே ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருக்கும் நிலையில் பூனைக்கு வாழும் எலிக்கு தலையை காட்டுகின்ற பாம்பின் செயற்பாடு இந்த 13 எரித்தல் அரசியலுக்குப் பின்னால் இருக்கின்றது.

இந்தியாவையும் தமிழர்களையும் சமாளிப்பதற்கு 13 என்றும், சீனாவை தம்வசம் வைத்திருக்க பிக்குகள் பேரணி ஒருங்கே கையாளப்படுகிறது. தமிழர்கள் ஏமாந்து விடக் கூடாது. ஆனால் சில தமிழ் அரசியல் வாதிகள் இதற்கு பின்னால் நிற்பது அரசியல் சுய இலாபம் கருதியே. இத்தகைய சூழலில் ரணில் ஜனாதிபதி.

இந்தியாவையும் தமிழர்களையும் பகைத்துக் கொள்ளாததற்கு 13 என்று சீனாவை தம்வசம் வைத்திருக்க பிக்குகள் பேரணி  கையாளப்படுகின்றது. ரணில் ஜனாதிபதி தேர்தலை நோக்கி காய் நகர்த்துவதையும் உணரக்கூடியதாக உள்ளது.

இந் நிலையில்  ஜனாதிபதி "நான் நாட்டை பிரிக்க மாட்டேன். சமஸ்ட் இல்லை. ஒற்றை ஆட்சியின் கீழ் தீர்வு" எனக் கூறுவதை நாம் அவதானிக்கலாம். சிங்கள பௌத்த வாக்குகளின் சொந்தக்காரர்கள் பக்கமாக நின்று அரசியல் செய்யும் தலைமையின் கீழ் தமிழர்களுக்கு  எதிர்காலம் இல்லை. 

இந்தப் பின்னணியில் சிங்கள பௌத்த வாக்குகளின் உரிமையாளர்கள் பேரணியை கொழும்பு நோக்கி நகர்த்தி உள்ளனர்.

தமிழர்கள் பௌத்தத்தை மதிக்கின்றார்கள். "அனைத்து உயிர்களும் துக்கமற்ற இருப்பதாக, அனைத்து உயிர்களும் நலமாய் இருப்பதாக, அனைத்து உயிர்களும் நோயற்ற இருப்பதாக" என்பதே பௌத்த கோட்பாடு. ஆனால் ஒரு சில பிக்குகளின் அரசியல் அதுவல்ல. 

பிக்குகளின் அரசியல் என்பது கொலையும் செய்யும் என்பதற்கு எஸ்.டப்ளியு.பண்டார நாயக்கவின் கொலை நல்ல உதாரணம். இதே போல் அது தீயோடும் விளையாடும் என்பதற்கு இறுதி உதாரணமே 13 தீயிட்டு கொளுத்தியமை. 75ஆண்டு காலமாக தீர்வு சிங்கள பௌத்த  அரசியலாலும் பிக்குகளின் அரசியலாலும் சுதந்திரம் சாம்பலாகி உள்ளது.-என்றுள்ளது.

ரணில் 13 என்று கூறுவதும்; பிக்குகள் அதனை பேரணியாக வந்து எரிப்பதும் அரசியல் நாடகமே - அருட்தந்தை சக்திவேல் பிக்குகள் நேற்று (8.2.2023) பேரணி நடாத்தி அரசியல் யாப்பின் 13 ஆம் திருத்தத்தை வீதியில் தீட்டு எரித்திருக்கின்றார்கள். அவர்கள் எரித்து பௌத்தத்தையே. பிக்குகளின் அரசியலுக்குப் பின்னால் உள்ள அரசியல் சக்தியே அதற்கு காரணமாகும்  என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,ராஜீவ் காந்தி-ஜே.ஆர் ஒப்பந்தத்தை 36 வருடங்களுக்கு முன்னரே  தமிழர்கள் தமது அரசியல் தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. 13 ம் திருத்தத்தோடு உருவான மாகாண சபையையும்  ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரும் அதனை தீர்வாக முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கும் எவரும் ஆயத்தம் இல்லை. கொழம்பு அரசியல்வாதியான திரு.மனோ கணேசன் மட்டுமே இது அரசியல் தீர்வுக்காண ஆரம்பப் புள்ளி என கூறிக் கொண்டிருக்கின்றார்.இத்தகைய சூழ்நிலையில் ரணில் 13 என்று கூறுவதும்; பிக்குகள் அதனை பேரணியாக வந்து எரிப்பதும் அரசியல் நாடகமே அன்றி வேரில்லை. சீன சார்பு  குழுவினரின் ஆதரவோடும்,  இந்திய மற்றும் மேற்குலக்கு சார்பு ஆதரவோடுமே ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருக்கும் நிலையில் பூனைக்கு வாழும் எலிக்கு தலையை காட்டுகின்ற பாம்பின் செயற்பாடு இந்த 13 எரித்தல் அரசியலுக்குப் பின்னால் இருக்கின்றது.இந்தியாவையும் தமிழர்களையும் சமாளிப்பதற்கு 13 என்றும், சீனாவை தம்வசம் வைத்திருக்க பிக்குகள் பேரணி ஒருங்கே கையாளப்படுகிறது. தமிழர்கள் ஏமாந்து விடக் கூடாது. ஆனால் சில தமிழ் அரசியல் வாதிகள் இதற்கு பின்னால் நிற்பது அரசியல் சுய இலாபம் கருதியே. இத்தகைய சூழலில் ரணில் ஜனாதிபதி.இந்தியாவையும் தமிழர்களையும் பகைத்துக் கொள்ளாததற்கு 13 என்று சீனாவை தம்வசம் வைத்திருக்க பிக்குகள் பேரணி  கையாளப்படுகின்றது. ரணில் ஜனாதிபதி தேர்தலை நோக்கி காய் நகர்த்துவதையும் உணரக்கூடியதாக உள்ளது.இந் நிலையில்  ஜனாதிபதி "நான் நாட்டை பிரிக்க மாட்டேன். சமஸ்ட் இல்லை. ஒற்றை ஆட்சியின் கீழ் தீர்வு" எனக் கூறுவதை நாம் அவதானிக்கலாம். சிங்கள பௌத்த வாக்குகளின் சொந்தக்காரர்கள் பக்கமாக நின்று அரசியல் செய்யும் தலைமையின் கீழ் தமிழர்களுக்கு  எதிர்காலம் இல்லை. இந்தப் பின்னணியில் சிங்கள பௌத்த வாக்குகளின் உரிமையாளர்கள் பேரணியை கொழும்பு நோக்கி நகர்த்தி உள்ளனர்.தமிழர்கள் பௌத்தத்தை மதிக்கின்றார்கள். "அனைத்து உயிர்களும் துக்கமற்ற இருப்பதாக, அனைத்து உயிர்களும் நலமாய் இருப்பதாக, அனைத்து உயிர்களும் நோயற்ற இருப்பதாக" என்பதே பௌத்த கோட்பாடு. ஆனால் ஒரு சில பிக்குகளின் அரசியல் அதுவல்ல. பிக்குகளின் அரசியல் என்பது கொலையும் செய்யும் என்பதற்கு எஸ்.டப்ளியு.பண்டார நாயக்கவின் கொலை நல்ல உதாரணம். இதே போல் அது தீயோடும் விளையாடும் என்பதற்கு இறுதி உதாரணமே 13 தீயிட்டு கொளுத்தியமை. 75ஆண்டு காலமாக தீர்வு சிங்கள பௌத்த  அரசியலாலும் பிக்குகளின் அரசியலாலும் சுதந்திரம் சாம்பலாகி உள்ளது.-என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement