• May 19 2024

13என்ற குழந்தை இன்னும் உயிரோடு இருக்கின்றதா அல்லது கருமாதி செய்து விட்டீர்களா?- சிறீதரன் சபையில் கேள்வி!

Sharmi / Feb 9th 2023, 11:25 am
image

Advertisement

13வது திருத்தச்சட்டம் என்ற குழந்தைக்கு இன்று 35 வயது ஆகிவிட்டதாகவும் அந்த குழந்தை இன்றும் உயிரோடு இருக்கின்றதா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடர் ஆரம்பமானியுள்ளதுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக நடைபெற்று வருகின்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

மீண்டும் மீண்டும் அனைத்து சிங்கள தலைவர்களும் ஒற்றையாட்சி என்ற கோசத்திற்குள் நிற்பதாக சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜே.ஆர் ஜெயவர்த்தன உயிரோடு இருந்தபோது போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று சாதாரணமாக அறவழியில் போராடிக்கொண்டிருந்த மக்களை பார்த்து போரை பிரகடனம் செய்திருந்தார்.

ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் கடந்த காலங்கள் பௌத்த பிக்குமாரையும் இனவாத ரீதியான போராட்டங்களும் இந்த நாட்டை பாரிய யுத்தத்திற்கு அழைத்து சென்றிருந்ததாக சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த யுத்தம் காரணமாகவே இன்று இலங்கை அதளபாதாளத்திற்குள் விடு இன்னும் எழும்ப முடியாத நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

13என்ற குழந்தை இன்னும் உயிரோடு இருக்கின்றதா அல்லது கருமாதி செய்து விட்டீர்களா- சிறீதரன் சபையில் கேள்வி 13வது திருத்தச்சட்டம் என்ற குழந்தைக்கு இன்று 35 வயது ஆகிவிட்டதாகவும் அந்த குழந்தை இன்றும் உயிரோடு இருக்கின்றதா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடர் ஆரம்பமானியுள்ளதுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக நடைபெற்று வருகின்றது.இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.மீண்டும் மீண்டும் அனைத்து சிங்கள தலைவர்களும் ஒற்றையாட்சி என்ற கோசத்திற்குள் நிற்பதாக சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.ஜே.ஆர் ஜெயவர்த்தன உயிரோடு இருந்தபோது போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று சாதாரணமாக அறவழியில் போராடிக்கொண்டிருந்த மக்களை பார்த்து போரை பிரகடனம் செய்திருந்தார்.ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் கடந்த காலங்கள் பௌத்த பிக்குமாரையும் இனவாத ரீதியான போராட்டங்களும் இந்த நாட்டை பாரிய யுத்தத்திற்கு அழைத்து சென்றிருந்ததாக சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.இந்த யுத்தம் காரணமாகவே இன்று இலங்கை அதளபாதாளத்திற்குள் விடு இன்னும் எழும்ப முடியாத நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement