• Nov 25 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை நசுக்கவே ரணில் விரும்பினார்! ஜனாதிபதி அநுர குற்றச்சாட்டு

Chithra / Oct 21st 2024, 8:49 am
image

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் நேற்று  தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கவனம் செலுத்தப்பட்டது. நாங்கள் பொலிஸ் திணைக்களத்தை விசாரணைக்கு ஏற்ற துறையாக மாற்றினோம். இதனால் பலர் குழம்பியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இருந்து ஆட்சியைப் பிடிக்க முயற்சித்தவர்கள் இன்று 5 ஆண்டுகளுக்கு பின்னரே விழித்துள்ளனர்.

இப்போது அந்த அறிக்கையை கொடு, இந்த அறிக்கையை கொடு என்கிறார்கள். அந்த இரண்டு அறிக்கைகளும் ரணில் விக்கிரமசிங்கவின் அறிக்கைகள்.

அது இரண்டும் விசாரணைக் குழுக்கள் அல்ல. நான் வந்ததும் அந்த அறிக்கைகளுக்கு என்ன நடந்தது என்று முன்னாள் ஜனாதிபதி செயலாளரிடம் கேட்டேன். இந்த விசாரணையை நசுக்கவே ரணில் விக்கிரமசிங்க விரும்பினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளோம்.

அதனை நசுக்குவதற்கும், சுருக்குவதற்கும் கோமாவில் இருந்தவர்கள் தற்போதே விழித்துள்ளனர்.

இந்த நபரின் தலையீடு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பது அல்ல.

எனவே, நாங்கள் அவர்களுக்கு அடிபணிய மாட்டோம், அதில் சிக்கிக்கொள்ளவும் மாட்டோம்.

நியாயமான விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்துவோம். என்றார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை நசுக்கவே ரணில் விரும்பினார் ஜனாதிபதி அநுர குற்றச்சாட்டு  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கட்டுநாயக்கவில் நேற்று  தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கவனம் செலுத்தப்பட்டது. நாங்கள் பொலிஸ் திணைக்களத்தை விசாரணைக்கு ஏற்ற துறையாக மாற்றினோம். இதனால் பலர் குழம்பியுள்ளனர்.உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இருந்து ஆட்சியைப் பிடிக்க முயற்சித்தவர்கள் இன்று 5 ஆண்டுகளுக்கு பின்னரே விழித்துள்ளனர்.இப்போது அந்த அறிக்கையை கொடு, இந்த அறிக்கையை கொடு என்கிறார்கள். அந்த இரண்டு அறிக்கைகளும் ரணில் விக்கிரமசிங்கவின் அறிக்கைகள்.அது இரண்டும் விசாரணைக் குழுக்கள் அல்ல. நான் வந்ததும் அந்த அறிக்கைகளுக்கு என்ன நடந்தது என்று முன்னாள் ஜனாதிபதி செயலாளரிடம் கேட்டேன். இந்த விசாரணையை நசுக்கவே ரணில் விக்கிரமசிங்க விரும்பினார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளோம்.அதனை நசுக்குவதற்கும், சுருக்குவதற்கும் கோமாவில் இருந்தவர்கள் தற்போதே விழித்துள்ளனர்.இந்த நபரின் தலையீடு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பது அல்ல.எனவே, நாங்கள் அவர்களுக்கு அடிபணிய மாட்டோம், அதில் சிக்கிக்கொள்ளவும் மாட்டோம்.நியாயமான விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்துவோம். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement