• May 19 2024

கெஹெலியவை காப்பாற்ற ஆளுங்கட்சிக்குள் கறுப்பு ஆடுகளை களையெடுக்கும் ரணில்! samugammedia

Tamil nila / Aug 29th 2023, 10:29 pm
image

Advertisement

சுகாதார அமைச்சருக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்க ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று தயாராகி வருவதாக அறிய முடிகிறது.

குறித்த விடயம் தொடர்ப்பான  தகவல்கள் ஜனாதிபதியின் காதுகளுக்கு எட்டியதால் எதிர்வரும் செப்டெம்பர் 5, 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட உத்தரவை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இந்த நாட்களில் நடைபெறவுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பில் அமைச்சர்களுடன் கலந்துரையாடி ஏனையவர்களுக்கும் தீர்மானத்தை தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான  விவாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தேவை என ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கோரியுள்ளது. என்றாலும், ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள்தான் பிரேரணையை விவாதிக்க முடியும் என ஆளுங்கட்சி கூறியுள்ளது.

ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தால் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை சபாநாயகர் தலைமையில் நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இறுதி தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் தெரியவருகிறது.

கெஹெலியவை காப்பாற்ற ஆளுங்கட்சிக்குள் கறுப்பு ஆடுகளை களையெடுக்கும் ரணில் samugammedia சுகாதார அமைச்சருக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்க ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று தயாராகி வருவதாக அறிய முடிகிறது.குறித்த விடயம் தொடர்ப்பான  தகவல்கள் ஜனாதிபதியின் காதுகளுக்கு எட்டியதால் எதிர்வரும் செப்டெம்பர் 5, 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட உத்தரவை விடுத்துள்ளார்.சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இந்த நாட்களில் நடைபெறவுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பில் அமைச்சர்களுடன் கலந்துரையாடி ஏனையவர்களுக்கும் தீர்மானத்தை தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான  விவாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தேவை என ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கோரியுள்ளது. என்றாலும், ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள்தான் பிரேரணையை விவாதிக்க முடியும் என ஆளுங்கட்சி கூறியுள்ளது.ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தால் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை சபாநாயகர் தலைமையில் நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இறுதி தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் தெரியவருகிறது.

Advertisement

Advertisement

Advertisement