• Oct 19 2024

சிங்களவர்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள மொட்டு – சர்வதேச ரீதியில் சக்திமானாக மாறிய ரணில்.! samugammedia

Tamil nila / Apr 23rd 2023, 5:51 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுன கட்சியின் முழுமையான ஆதரவில் தங்கியுள்ளதாகவும் ஆனால் தென்னிலங்கையில் சிங்களவர்கள் மத்தியில் மொட்டுக்கட்சி, செல்வாக்கை இழந்துள்ளதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் ஆய்வாளர் ஆ.ஜோதிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதிக்கு மொட்டு கட்சியிருக்குமாக உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தற்போது ஒரு பலவீனமா நிலையில் ஜனாதிபதி இருப்பதாக ஆ.ஜோதிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சூழலில் சர்வசே நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை விரும்பியோ அல்லது விரும்பாமலோ அதனை நிறைவேற்றவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் போது சிங்கள மக்களிடமிருந்து பாரிய எதிர்ப்புக்கள் ஏற்படும் என்றும் எனவே இவற்றினை எல்லாம் சமாளிப்பதற்காகவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வருவதாக ஆ.ஜோதிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில், தற்போதைய நிலையில் ரணில் பலவீனமாக இருந்தாலும் சர்வதேச ரீதியில் பலம்வாய்ந்த ஒருவராகவே இருப்பதாக ஆ.ஜோதிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்களவர்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள மொட்டு – சர்வதேச ரீதியில் சக்திமானாக மாறிய ரணில். samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுன கட்சியின் முழுமையான ஆதரவில் தங்கியுள்ளதாகவும் ஆனால் தென்னிலங்கையில் சிங்களவர்கள் மத்தியில் மொட்டுக்கட்சி, செல்வாக்கை இழந்துள்ளதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் ஆய்வாளர் ஆ.ஜோதிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.அத்துடன் ஜனாதிபதிக்கு மொட்டு கட்சியிருக்குமாக உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தற்போது ஒரு பலவீனமா நிலையில் ஜனாதிபதி இருப்பதாக ஆ.ஜோதிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான சூழலில் சர்வசே நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை விரும்பியோ அல்லது விரும்பாமலோ அதனை நிறைவேற்றவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு இந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் போது சிங்கள மக்களிடமிருந்து பாரிய எதிர்ப்புக்கள் ஏற்படும் என்றும் எனவே இவற்றினை எல்லாம் சமாளிப்பதற்காகவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வருவதாக ஆ.ஜோதிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.இலங்கையில், தற்போதைய நிலையில் ரணில் பலவீனமாக இருந்தாலும் சர்வதேச ரீதியில் பலம்வாய்ந்த ஒருவராகவே இருப்பதாக ஆ.ஜோதிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement