• Mar 02 2025

மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் இல்லை – ரணில் விக்கிரமசிங்க

Tharmini / Mar 1st 2025, 10:32 am
image

அனுபவமற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கும் தெரிவித்ததாக ரணில் தெரிவித்தார்.

“பெராரி ரக வாகன உரிமம் உள்ளவர்கள் , எல் போர்ட் உரிமம் உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்திற்கு திரும்பும் நோக்கம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

கொழும்பில் உள்ள புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற இளம் வழக்கறிஞர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து, ரணில் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்ப உள்ளதாக ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி, ஊடகவியலாளர்கள் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி கேட்டனர்.

மேலும், நாடு திவாலானபோது தான் ஏற்றுக்கொண்ட சவாலின் வெற்றிகரமாக நடத்தியமை தொடர்பில் பணிவான மகிழ்ச்சி இருப்பதாக கூறிய முன்னாள் ஜனாதிபதி மக்கள் நாட்டின் பொறுப்பை ஒரு புதிய குழுவிடம் ஒப்படைத்துள்ளதால், அந்தக் குழு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் இல்லை – ரணில் விக்கிரமசிங்க அனுபவமற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கும் தெரிவித்ததாக ரணில் தெரிவித்தார்.“பெராரி ரக வாகன உரிமம் உள்ளவர்கள் , எல் போர்ட் உரிமம் உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை” என்று அவர் சுட்டிக்காட்டினார்.நாடாளுமன்றத்திற்கு திரும்பும் நோக்கம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.கொழும்பில் உள்ள புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற இளம் வழக்கறிஞர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து, ரணில் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்ப உள்ளதாக ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி, ஊடகவியலாளர்கள் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி கேட்டனர்.மேலும், நாடு திவாலானபோது தான் ஏற்றுக்கொண்ட சவாலின் வெற்றிகரமாக நடத்தியமை தொடர்பில் பணிவான மகிழ்ச்சி இருப்பதாக கூறிய முன்னாள் ஜனாதிபதி மக்கள் நாட்டின் பொறுப்பை ஒரு புதிய குழுவிடம் ஒப்படைத்துள்ளதால், அந்தக் குழு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement