• Jan 13 2025

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பை ஆரம்பித்த ரணில்; நாடு திரும்பியதும் அதிரடி நடவடிக்கை

Chithra / Jan 3rd 2025, 8:52 am
image


நாடு திரும்பியவுடனேயே ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா மற்றும் நேபாளத்துக்கான தனிப்பட்ட விஜயங்களை நிறைவு செய்து கொண்டு நேற்று நாடு திரும்பினார்.

நாடு திரும்பியவுடனேயே ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். இது தொடர்பில் அவர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

உத்தேச உள்ளுராட்சிமன்றத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்கு ஐ.தே.க.வை பலப்படுத்துவதற்கான மறுசீரமைப்புக்கள் குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றார். 

குறிப்பாக ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாரத்தில் அந்த குழுவின் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. 

அறிக்கை கையளிக்கப்பட்டதன் பின்னர் அதன் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது. 

அவற்றைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியுடனான இணைவு குறித்து முன்வைக்கப்படும் நிலைப்பாடுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பை ஆரம்பித்த ரணில்; நாடு திரும்பியதும் அதிரடி நடவடிக்கை நாடு திரும்பியவுடனேயே ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா மற்றும் நேபாளத்துக்கான தனிப்பட்ட விஜயங்களை நிறைவு செய்து கொண்டு நேற்று நாடு திரும்பினார்.நாடு திரும்பியவுடனேயே ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். இது தொடர்பில் அவர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.உத்தேச உள்ளுராட்சிமன்றத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்கு ஐ.தே.க.வை பலப்படுத்துவதற்கான மறுசீரமைப்புக்கள் குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றார். குறிப்பாக ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இவ்வாரத்தில் அந்த குழுவின் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. அறிக்கை கையளிக்கப்பட்டதன் பின்னர் அதன் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது. அவற்றைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியுடனான இணைவு குறித்து முன்வைக்கப்படும் நிலைப்பாடுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement