• Sep 19 2024

ரணிலின் செயற்பாடுகள் இரட்டைத் தன்மை கொண்டவை - இந்தியாவிடம் முறையிட்ட சிறிதரன்!

Tamil nila / Feb 12th 2023, 12:33 pm
image

Advertisement

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வினை காண்பதற்கு கூட்டுப்பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படுவது அவசியம் என்றும் எனவே எதிர்காலத்தில் அதற்கான ஒத்துழைப்புக்களை இந்தியா வழங்க வேண்டுமென தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்தபோதே சிறீதரன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.


13ஆவது திருத்தச்சட்டத்தினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடைமுறைப்படுத்துவதாக அறிவித்து, 

சொற்ப காலத்துக்குள்ளேயே பௌத்த பிக்குகள் அதற்கு எதிராக போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள்.

ஆகவே, ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. 


அத்துடன் அவரது செயற்பாடுகளும் இரட்டைத் தன்மை கொண்டவையாகவே உள்ளன.

இவ்வாறான நிலையில் எம்மைப் பொறுத்தவரையில், 13ஆவது திருத்தச்சட்டத்தினை அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது. 


ஆகவே, நாம் சமஸ்டி அடிப்படையிலான தீர்வொன்றையே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். 


அதற்காகவே எமது மக்களும் தொடர்ச்சியாக ஆணை வழங்கி வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையில், அவ்விதமானதொரு தீர்வுப்பொதியை கூட்டுப்பொறிமுறையொன்றின் ஊடாகவே தீர்மானிக்க முடியும்.

 

அந்த தீர்வுப்பொதியை தயாரிப்பதற்காக வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல், சிவில் சமூக பிரதிநிதிகள், தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், புதுடில்லியின் அதிகாரிகள் மற்றும் புலம்பெயர் தேசத்தில் செயற்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. 


அவ்விதமான செயற்பாடு ஒன்றை முன்னெடுப்பதற்கு தாங்கள் எதிர்காலத்தில் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரணிலின் செயற்பாடுகள் இரட்டைத் தன்மை கொண்டவை - இந்தியாவிடம் முறையிட்ட சிறிதரன் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வினை காண்பதற்கு கூட்டுப்பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படுவது அவசியம் என்றும் எனவே எதிர்காலத்தில் அதற்கான ஒத்துழைப்புக்களை இந்தியா வழங்க வேண்டுமென தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்தபோதே சிறீதரன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.13ஆவது திருத்தச்சட்டத்தினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடைமுறைப்படுத்துவதாக அறிவித்து, சொற்ப காலத்துக்குள்ளேயே பௌத்த பிக்குகள் அதற்கு எதிராக போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள்.ஆகவே, ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. அத்துடன் அவரது செயற்பாடுகளும் இரட்டைத் தன்மை கொண்டவையாகவே உள்ளன.இவ்வாறான நிலையில் எம்மைப் பொறுத்தவரையில், 13ஆவது திருத்தச்சட்டத்தினை அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, நாம் சமஸ்டி அடிப்படையிலான தீர்வொன்றையே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அதற்காகவே எமது மக்களும் தொடர்ச்சியாக ஆணை வழங்கி வருகின்றார்கள்.இவ்வாறான நிலையில், அவ்விதமானதொரு தீர்வுப்பொதியை கூட்டுப்பொறிமுறையொன்றின் ஊடாகவே தீர்மானிக்க முடியும். அந்த தீர்வுப்பொதியை தயாரிப்பதற்காக வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல், சிவில் சமூக பிரதிநிதிகள், தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், புதுடில்லியின் அதிகாரிகள் மற்றும் புலம்பெயர் தேசத்தில் செயற்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. அவ்விதமான செயற்பாடு ஒன்றை முன்னெடுப்பதற்கு தாங்கள் எதிர்காலத்தில் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement