• May 17 2024

ரணிலின் கையாலாகாத்தனமே காரணம் - தனது தந்தையை சுட்டிக்காட்டிய சஜித்.!

Sharmi / Jan 31st 2023, 12:45 pm
image

Advertisement

சர்வதேசத்தை கையாளுவதில் தோல்வியடைந்தமைக்கு அரசாங்கத்தின் கையாலாகாத்தனமும் செயற்திறனின்மையுமே காரணங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

இன்று அரசாங்கம் போட்டி போட்டுக்கொண்டு வரி விதிப்பதாகவும்இ மாதாந்த வருமானம் 45,000 ரூபாவுக்கு மேல் இருப்பவர்ளுக்கும் கூட வரி விதிக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் மற்றும் செயற்திறனற்ற காரணங்களால் சர்வதேசத்தை கையாளும் திறன் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சர்வதேச நாணய நிதியத்தை கையாளும் கலையை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ நிரூபித்துள்ளமையையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அழகான வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டு நாட்டை மீண்டும் ஒரு முறை வங்குரோத்தாக மாக்ற்றியது போன்று மீண்டும் ஒரு தவறான முடிவை எடுத்தால், நாடு தற்போது இருக்கும் இடத்திலிருந்து மேலும் வீழ்ச்சியடையும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரணிலின் கையாலாகாத்தனமே காரணம் - தனது தந்தையை சுட்டிக்காட்டிய சஜித். சர்வதேசத்தை கையாளுவதில் தோல்வியடைந்தமைக்கு அரசாங்கத்தின் கையாலாகாத்தனமும் செயற்திறனின்மையுமே காரணங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.இன்று அரசாங்கம் போட்டி போட்டுக்கொண்டு வரி விதிப்பதாகவும்இ மாதாந்த வருமானம் 45,000 ரூபாவுக்கு மேல் இருப்பவர்ளுக்கும் கூட வரி விதிக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் மற்றும் செயற்திறனற்ற காரணங்களால் சர்வதேசத்தை கையாளும் திறன் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சர்வதேச நாணய நிதியத்தை கையாளும் கலையை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ நிரூபித்துள்ளமையையும் சுட்டிக்காட்டியிருந்தார்.அழகான வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டு நாட்டை மீண்டும் ஒரு முறை வங்குரோத்தாக மாக்ற்றியது போன்று மீண்டும் ஒரு தவறான முடிவை எடுத்தால், நாடு தற்போது இருக்கும் இடத்திலிருந்து மேலும் வீழ்ச்சியடையும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement