• May 13 2024

சர்வசேத்தில் ரணிலின் செல்வாக்கு உயர்ந்துள்ளது – கூட்டமைப்பு மற்றும் விக்கி அணியினரே காரணம்.! samugammedia

Chithra / Jun 25th 2023, 4:51 pm
image

Advertisement

தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை என தமிழ் தேசிய மக்கள் 

முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று கொழுப்பில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட போதே ஒற்றையாட்சி என்ற வரையறைக்குள் தான் தீர்வு என்பதை ரணில் கூறியதாகவும் எனவே இங்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கஜேந்திகுமார் பொன்னம்பலம் குறிப்பிடுகின்றார்.

சர்வதேச மட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் செல்வாக்கை உயர்த்தும் நோக்கில் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்ற கண்துடைப்பு பேச்சுவார்த்தைக்கு சென்ற, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் விக்னேஸ்வரன் அணியினரை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் கஜேந்திகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் மக்களின் அடையாங்கள், நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்று ரணில் அறிவித்த பின்னும் பேச்சுவார்தையில் கலந்து கொண்டு, தமிழ் 

கட்சிகள் மக்களை ஏமாற்றுவதாகவும் கஜேந்திகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.


சர்வசேத்தில் ரணிலின் செல்வாக்கு உயர்ந்துள்ளது – கூட்டமைப்பு மற்றும் விக்கி அணியினரே காரணம். samugammedia தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.இன்று கொழுப்பில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட போதே ஒற்றையாட்சி என்ற வரையறைக்குள் தான் தீர்வு என்பதை ரணில் கூறியதாகவும் எனவே இங்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கஜேந்திகுமார் பொன்னம்பலம் குறிப்பிடுகின்றார்.சர்வதேச மட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் செல்வாக்கை உயர்த்தும் நோக்கில் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்ற கண்துடைப்பு பேச்சுவார்த்தைக்கு சென்ற, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் விக்னேஸ்வரன் அணியினரை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் கஜேந்திகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார்.தமிழ் மக்களின் அடையாங்கள், நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்று ரணில் அறிவித்த பின்னும் பேச்சுவார்தையில் கலந்து கொண்டு, தமிழ் கட்சிகள் மக்களை ஏமாற்றுவதாகவும் கஜேந்திகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement