• Jan 21 2025

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் வெற்றி உறுதி...! ஐ.தே.க அமைப்பாளர் திட்டவட்டம்....!

Sharmi / Mar 30th 2024, 8:48 am
image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடவுள்ள ரணிலின் வெற்றி உறுதி என கல்முனை மேற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் ஏ.எச்.எச்.எம்.நபார் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல அரசியல் கட்சிகள், பல்துறைசார்ந்த சமூகவியல் அமைப்புகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் போன்ற பலரின் ஆதரவோடு பொதுவேட்பாளராக நிச்சயமாக போட்டியிடுவார்.

எனவே, நாட்டின் தேசிய சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களில் பாரிய நீண்ட கால அனுபவம் கொண்ட இவரால் மாத்திரமே நாட்டின் சமகால அரசியல் பொருளாதார சமூகங்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க முடியும்.

இந்த உண்மையை உள்ளத்தினால் ஏற்றுக்கொண்ட நாட்டின் குடிமக்கள் நிச்சயமாக ஜனாதிபதியாக ரணிலை வெற்றி பெற செய்வார்கள் என உறுதிப்பட தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் வெற்றி உறுதி. ஐ.தே.க அமைப்பாளர் திட்டவட்டம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடவுள்ள ரணிலின் வெற்றி உறுதி என கல்முனை மேற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் ஏ.எச்.எச்.எம்.நபார் தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பல அரசியல் கட்சிகள், பல்துறைசார்ந்த சமூகவியல் அமைப்புகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் போன்ற பலரின் ஆதரவோடு பொதுவேட்பாளராக நிச்சயமாக போட்டியிடுவார்.எனவே, நாட்டின் தேசிய சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களில் பாரிய நீண்ட கால அனுபவம் கொண்ட இவரால் மாத்திரமே நாட்டின் சமகால அரசியல் பொருளாதார சமூகங்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க முடியும்.இந்த உண்மையை உள்ளத்தினால் ஏற்றுக்கொண்ட நாட்டின் குடிமக்கள் நிச்சயமாக ஜனாதிபதியாக ரணிலை வெற்றி பெற செய்வார்கள் என உறுதிப்பட தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement