• Jan 08 2025

ரஞ்சன் ராமநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணை

Chithra / Jan 1st 2025, 8:13 am
image

 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை அவதூறு செய்யும் வகையில், ரஞ்சன் கருத்து வெளியிட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். 

சிவில் செயற்பாட்டாளராக நாமல் குமார இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

கர்தினாலை அவமரியாதை செய்யும் வகையில் ரஞ்சன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பான ஒலிப்பதிவுகள் தம்மிடம் உள்ளதாக நாமல் குமார தெரிவித்திருந்தார்.

நாமல் குமார தொடர்பில் விசாரணை நடத்துமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் நாமல் குமாரவிடமும் மேலும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ரஞ்சன் ராமநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணை  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை அவதூறு செய்யும் வகையில், ரஞ்சன் கருத்து வெளியிட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.ரஞ்சன் ராமநாயக்கவிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். சிவில் செயற்பாட்டாளராக நாமல் குமார இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.கர்தினாலை அவமரியாதை செய்யும் வகையில் ரஞ்சன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பான ஒலிப்பதிவுகள் தம்மிடம் உள்ளதாக நாமல் குமார தெரிவித்திருந்தார்.நாமல் குமார தொடர்பில் விசாரணை நடத்துமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த சம்பவம் தொடர்பில் நாமல் குமாரவிடமும் மேலும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement