• Nov 26 2024

'ஐக்கிய ஜனநாயகக் குரல்' எனும் கட்சி அங்குரார்ப்பணம்: தலைவரானார் ரஞ்சன் ராமநாயக்க!

Chithra / Oct 9th 2024, 12:00 pm
image


ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் கட்சி இன்று கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது.

கட்சியின் தலைவராக ரஞ்சன் ராமநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி பொதுத் தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிட உள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், உட்பட பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கட்சியில் இணைய உள்ளனர்.

அங்குரார்ப்பண நிகழ்வில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவிக்கையில்

எனது குடியுரிமை நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இம்முறை  ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சீட்டு கிடைக்கப்பெற்றது.

ஆகவே என்னால் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என தெரிவித்துள்ளார்.

'ஐக்கிய ஜனநாயகக் குரல்' எனும் கட்சி அங்குரார்ப்பணம்: தலைவரானார் ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் கட்சி இன்று கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது.கட்சியின் தலைவராக ரஞ்சன் ராமநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி பொதுத் தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிட உள்ளது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், உட்பட பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கட்சியில் இணைய உள்ளனர்.அங்குரார்ப்பண நிகழ்வில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவிக்கையில்எனது குடியுரிமை நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இம்முறை  ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சீட்டு கிடைக்கப்பெற்றது.ஆகவே என்னால் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement