மாந்தை மேற்கு- ஈச்சிலவக்கை கிராம உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளம், அடம்பன், ஈச்சிலவக்கை ஆகிய கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து இன்று (06.02) கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.
உயிலங்குளம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவை பார்வையிட்டோம். இம் மருத்துவ மனையானது பல குறைபாடுகளுடன் காணப்படுகின்றது.
க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் இவ் வைத்தியசாலையை சுத்தப்படுத்தவுள்ளோம். மற்றும் மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியுள்ளது. மருந்துகளை வைத்து பராமரிப்பதற்கான குளிரூட்டப்பட்ட வசதிகள் கொண்ட களஞ்சியசாலை என்பவற்றையும் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மேலும், மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள ஈச்சலவக்கை கிராமம் மிகுந்த பின் தங்கிய கிராமமாக உள்ளது. அந்தக் கிராமத்தில் பல உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் மூன்று கிராமங்களை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தெரிவு செய்துள்ளோம். அதில் ஈச்சிலவக்கை கிராமமும் தெரிவு செய்யப்பட்டுளளது.
இதன்போது குடிநீர், பாதைகள், பாடசாலை, முன்பள்ளி, ஆலயங்கள் போன்ற அனைத்து இடங்களையும் அபிவிருத்தி செய்வதற்குரிய செயற்திட்ட முன்மொழிவுகளை சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு வழங்கியுள்ளோம். அதற்கான நிதியை விடுவித்து இவ்வருடத்திற்குள்ளேயே இக் கிராமத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு முடிக்கவுள்ளோம்.
ஈச்சிலவக்கை பாடசாலையில் பணிபுரியும் அதிபர்இ ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள். விளையாட்டு துறையில் இப் பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டம் வரை சென்று சாதனை புரிந்துள்ளார்கள். ஆசிரியர், அதிபர் ஆகியோர் விடுதிகளில் தங்கியிருந்து வேலை செய்கிறார்கள். இப் பாடசாலையில் சில வேலைகள் செய்து கொடுக்கப்பட வேண்டியுள்ளது. அதனை செய்து முடிப்போம்.
எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் துரிதமாக இணங்காணப்பட்ட இவ் வேலைகளை செய்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.
மன்னாரில் கிராம உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை மாந்தை மேற்கு- ஈச்சிலவக்கை கிராம உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளம், அடம்பன், ஈச்சிலவக்கை ஆகிய கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து இன்று (06.02) கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில். உயிலங்குளம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவை பார்வையிட்டோம். இம் மருத்துவ மனையானது பல குறைபாடுகளுடன் காணப்படுகின்றது. க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் இவ் வைத்தியசாலையை சுத்தப்படுத்தவுள்ளோம். மற்றும் மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியுள்ளது. மருந்துகளை வைத்து பராமரிப்பதற்கான குளிரூட்டப்பட்ட வசதிகள் கொண்ட களஞ்சியசாலை என்பவற்றையும் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.மேலும், மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள ஈச்சலவக்கை கிராமம் மிகுந்த பின் தங்கிய கிராமமாக உள்ளது. அந்தக் கிராமத்தில் பல உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் மூன்று கிராமங்களை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தெரிவு செய்துள்ளோம். அதில் ஈச்சிலவக்கை கிராமமும் தெரிவு செய்யப்பட்டுளளது.இதன்போது குடிநீர், பாதைகள், பாடசாலை, முன்பள்ளி, ஆலயங்கள் போன்ற அனைத்து இடங்களையும் அபிவிருத்தி செய்வதற்குரிய செயற்திட்ட முன்மொழிவுகளை சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு வழங்கியுள்ளோம். அதற்கான நிதியை விடுவித்து இவ்வருடத்திற்குள்ளேயே இக் கிராமத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு முடிக்கவுள்ளோம்.ஈச்சிலவக்கை பாடசாலையில் பணிபுரியும் அதிபர்இ ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள். விளையாட்டு துறையில் இப் பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டம் வரை சென்று சாதனை புரிந்துள்ளார்கள். ஆசிரியர், அதிபர் ஆகியோர் விடுதிகளில் தங்கியிருந்து வேலை செய்கிறார்கள். இப் பாடசாலையில் சில வேலைகள் செய்து கொடுக்கப்பட வேண்டியுள்ளது. அதனை செய்து முடிப்போம்.எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் துரிதமாக இணங்காணப்பட்ட இவ் வேலைகளை செய்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.