• Jan 16 2025

எலிக் காய்ச்சல் நோய் பற்றிய விழிப்புணர்வு அவசியம் - வைத்தியர் கேதீஸ்வரன்

Tharmini / Dec 16th 2024, 4:54 pm
image

எலிக் காய்ச்சல் நோய் காரணமாக நேற்று முன்தினம் (14) இரவு யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் கரவெட்டி சுகாதார பிரிவை சேர்ந்த துன்னாலையைச் சேர்ந்த 23 வயதானவர் உயிரிழந்துள்ளார்.

வைத்தியர் கேதீஸ்வரன் தற்போது யாழ். மாவட்டத்தில் பரவி வரும் எலிக் காய்ச்சல் காரணமாக இதுவரை இனம் காணப்பட்டுள்ளவர்கள் மற்றும் நோய் விழிப்புணர்வு பற்றிக் கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும், தெரிவிக்கையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 21 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 11 பேருமாக 32 பேரும் எலிக் காய்ச்சல் நோய்க்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கடந்த 24 மணித்தியாலத்திலே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலே 9 புதிய நோயாளர்களும் யாழ். போதனா வைத்தியசாலையிலே 4 புதிய நோயாளர்களும் இந்த எலிக் காய்ச்சல் நோயினால் அனுமதிக்க பட்டுள்ளனர்.

மேலும், இதுவரையான காலப்பகுதியில் யாழ். மாவட்டத்திலே எலிக் காய்ச்சல் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டு இருக்கின்றது.

 மேலும், இந்த எலிக் காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு விவசாயிகளுக்கும் கடல் தொழில் செய்பவர்களுக்கும் தடுப்பு மருந்துகள் வழங்கும் பணிகள் ஏற்கெனவே இடம் பெற்று வருகின்றது.

எலிக் காய்ச்சல் இருப்பவர்களை அடையாளம் கண்டு எங்களுடைய சுகாதார பணியாளர்கள் மருத்துவ மாணவர்கள் ஈடு பட்டு கொண்டு இருக்கிறார்கள். 

குறிப்பாக கரவெட்டி பிரதேசங்களிலே கால் நடைகள் மூலம் இந்த தோற்று ஏற்பட்டு இருக்கலாம் கால் கடைகளுக்கும் இந்த நோய் ஏற்பட்டு இருக்கலாம்.

அவற்றின் மூலம் இந்த நோய் பரவலாம் என ஐயம் ஏற்பட்டு இருக்கின்றது.

அந்த வகையிலே இந்த பிரதேசங்களில் இருக்கின்ற குறிப்பாக பருத்தித்துறை பிரதேசங்களில் இருக்கின்ற கால் கடைகளுக்கு தொற்று உள்ளதை உறுதி படுத்துவதற்காக குருதி மாதிரிகளை எடுத்து உறுதி படுத்துமாறு கால் நடை சுகாதார திணைக்களத்திலும் நாங்கள் உதவி கோரி இருக்கின்றோம், என - வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எலிக் காய்ச்சல் நோய் பற்றிய விழிப்புணர்வு அவசியம் - வைத்தியர் கேதீஸ்வரன் எலிக் காய்ச்சல் நோய் காரணமாக நேற்று முன்தினம் (14) இரவு யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் கரவெட்டி சுகாதார பிரிவை சேர்ந்த துன்னாலையைச் சேர்ந்த 23 வயதானவர் உயிரிழந்துள்ளார்.வைத்தியர் கேதீஸ்வரன் தற்போது யாழ். மாவட்டத்தில் பரவி வரும் எலிக் காய்ச்சல் காரணமாக இதுவரை இனம் காணப்பட்டுள்ளவர்கள் மற்றும் நோய் விழிப்புணர்வு பற்றிக் கருத்து தெரிவித்தார்.அவர் மேலும், தெரிவிக்கையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 21 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 11 பேருமாக 32 பேரும் எலிக் காய்ச்சல் நோய்க்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும், கடந்த 24 மணித்தியாலத்திலே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலே 9 புதிய நோயாளர்களும் யாழ். போதனா வைத்தியசாலையிலே 4 புதிய நோயாளர்களும் இந்த எலிக் காய்ச்சல் நோயினால் அனுமதிக்க பட்டுள்ளனர்.மேலும், இதுவரையான காலப்பகுதியில் யாழ். மாவட்டத்திலே எலிக் காய்ச்சல் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த எலிக் காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு விவசாயிகளுக்கும் கடல் தொழில் செய்பவர்களுக்கும் தடுப்பு மருந்துகள் வழங்கும் பணிகள் ஏற்கெனவே இடம் பெற்று வருகின்றது.எலிக் காய்ச்சல் இருப்பவர்களை அடையாளம் கண்டு எங்களுடைய சுகாதார பணியாளர்கள் மருத்துவ மாணவர்கள் ஈடு பட்டு கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக கரவெட்டி பிரதேசங்களிலே கால் நடைகள் மூலம் இந்த தோற்று ஏற்பட்டு இருக்கலாம் கால் கடைகளுக்கும் இந்த நோய் ஏற்பட்டு இருக்கலாம்.அவற்றின் மூலம் இந்த நோய் பரவலாம் என ஐயம் ஏற்பட்டு இருக்கின்றது.அந்த வகையிலே இந்த பிரதேசங்களில் இருக்கின்ற குறிப்பாக பருத்தித்துறை பிரதேசங்களில் இருக்கின்ற கால் கடைகளுக்கு தொற்று உள்ளதை உறுதி படுத்துவதற்காக குருதி மாதிரிகளை எடுத்து உறுதி படுத்துமாறு கால் நடை சுகாதார திணைக்களத்திலும் நாங்கள் உதவி கோரி இருக்கின்றோம், என - வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement