• Nov 14 2024

அநுரவுடன் இணைந்தார் ரவூப் ஹக்கீமின் முக்கிய சகா ஆரிப் சம்சுதீன்

Chithra / Sep 8th 2024, 10:47 am
image


  

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களில் நான் எதிர்பார்த்த  நேர்மையான, ஊழலற்ற  ஒரு தலைவரான அநுரவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட  சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்  அண்மையில் கல்முனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினராகவும், தேசிய இளைஞர் அமைப்பாளராகவும்

பதவி வகித்த நான், அக்கட்சியில் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் விலகிக் கொள்வதாக கட்சியின் தலைவருக்கும், செயலாளருக்கும்  எழுத்து மூலம் அறிவித்துவிட்டு இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்றேன்.

இந்நிலையில் நடைபெறவுள்ள ஜனதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தலாக அமைய வேண்மேன்பது எனது ஆசை மட்டுமல்ல நீதியையும், நியாயத்தையும், சமத்துவத்தையும், சம உரிமையையும் விரும்புகின்றவர்களின் அவாவும் அதுவாகவே இருக்கக் கூடும்.

அது மாத்திரமின்றி ஊழல், மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகமற்ற ஆட்சியாளர்களினால் ஆளப்படுகின்ற ஒரு நாடாக  இலங்கை மிளிர வேண்டும். 

அதற்கோர் புதிய சக்தி அவசியம். அச்சக்தி தேசிய மக்கள் சக்தியிடம் காணப்படுவதை நான் காண்கின்றேன் என அவர் குறிப்பிட்டார்.

அநுரவுடன் இணைந்தார் ரவூப் ஹக்கீமின் முக்கிய சகா ஆரிப் சம்சுதீன்   ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களில் நான் எதிர்பார்த்த  நேர்மையான, ஊழலற்ற  ஒரு தலைவரான அநுரவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட  சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்  அண்மையில் கல்முனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினராகவும், தேசிய இளைஞர் அமைப்பாளராகவும்பதவி வகித்த நான், அக்கட்சியில் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் விலகிக் கொள்வதாக கட்சியின் தலைவருக்கும், செயலாளருக்கும்  எழுத்து மூலம் அறிவித்துவிட்டு இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்றேன்.இந்நிலையில் நடைபெறவுள்ள ஜனதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தலாக அமைய வேண்மேன்பது எனது ஆசை மட்டுமல்ல நீதியையும், நியாயத்தையும், சமத்துவத்தையும், சம உரிமையையும் விரும்புகின்றவர்களின் அவாவும் அதுவாகவே இருக்கக் கூடும்.அது மாத்திரமின்றி ஊழல், மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகமற்ற ஆட்சியாளர்களினால் ஆளப்படுகின்ற ஒரு நாடாக  இலங்கை மிளிர வேண்டும். அதற்கோர் புதிய சக்தி அவசியம். அச்சக்தி தேசிய மக்கள் சக்தியிடம் காணப்படுவதை நான் காண்கின்றேன் என அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement