• May 17 2024

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு

Chithra / Dec 30th 2022, 8:59 am
image

Advertisement

அரச சேவையில் இருந்து இவ்வருடம் ஓய்வு பெற்றவர்களில் 200 பேர் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அரச கணக்காய்வு அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் போது ஏற்படும் வெற்றிடங்களுக்காக கூடுதலான இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

சில அரச நிறுவனங்களின் தலைவர்கள் அநாவசியமான முறையில் தமக்கு நெருக்கமானவர்களை ஓய்வு பெற்றதன் பின்னரும் மீண்டும் அடிப்படை சம்பளத்துடன் சேவையில் இணைத்துக் கொண்டுள்ளமையும் தெரிய வந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் நாளை முதல் 60 வயதை பூர்த்தி செய்யும் அனைத்து அரச ஊழியர்களும் ஓய்வு பெறவுள்ளர்.

இதன்மூலம் சுமார் 30 ஆயிரம் அரச ஊழிர்கள் ஓய்வு பெறவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளில் இதுவும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது. 


ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு அரச சேவையில் இருந்து இவ்வருடம் ஓய்வு பெற்றவர்களில் 200 பேர் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அரச கணக்காய்வு அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் போது ஏற்படும் வெற்றிடங்களுக்காக கூடுதலான இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.சில அரச நிறுவனங்களின் தலைவர்கள் அநாவசியமான முறையில் தமக்கு நெருக்கமானவர்களை ஓய்வு பெற்றதன் பின்னரும் மீண்டும் அடிப்படை சம்பளத்துடன் சேவையில் இணைத்துக் கொண்டுள்ளமையும் தெரிய வந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் நாளை முதல் 60 வயதை பூர்த்தி செய்யும் அனைத்து அரச ஊழியர்களும் ஓய்வு பெறவுள்ளர்.இதன்மூலம் சுமார் 30 ஆயிரம் அரச ஊழிர்கள் ஓய்வு பெறவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளில் இதுவும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement