நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய ஹரீன் பெர்னாண்டோ நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பதவியை இழந்தார்.
இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக தாம் நியமிக்கப்பட்டால் அந்தப் பதவியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக ஹிருனிகா தெரிவித்துள்ளார்.
எனினும் அந்தப் பதவியை தமக்கு வழங்கமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோரியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சஜித் பிரேமதாசவை ஊடக நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற வகையில் ஆட்டுவிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹிருனிகாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்குவதற்கு ஊடக நிறுவனமொன்று எதிர்ப்பை வெளியிட்டதாக வெளியான தகவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மகிழ்ச்சியுடன் ஏற்க தயார். ஹிருணிகா அறிவிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய ஹரீன் பெர்னாண்டோ நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பதவியை இழந்தார்.இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக தாம் நியமிக்கப்பட்டால் அந்தப் பதவியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக ஹிருனிகா தெரிவித்துள்ளார்.எனினும் அந்தப் பதவியை தமக்கு வழங்கமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோரியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் சஜித் பிரேமதாசவை ஊடக நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற வகையில் ஆட்டுவிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஹிருனிகாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்குவதற்கு ஊடக நிறுவனமொன்று எதிர்ப்பை வெளியிட்டதாக வெளியான தகவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.