• May 17 2024

அவுஸ்திரேலியாவுடனான உறவுகளை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு செல்வதற்கு தயார்- சீனா!

Tamil nila / Dec 7th 2022, 3:03 pm
image

Advertisement

அவுஸ்திரேலியாவுடனான உறவுகளை ஒத்துழைப்பின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு தயார் என அவுஸ்திரேலியாவிற்கான சீன தூதுவர் Xiao Qianதெரிவித்துள்ளார்.


சிட்னியின் தொழில்நுட்ப பல்கலைகழகம் ஏற்பாடு செய்திருந்த அவுஸ்திரேலிய சீன உறவுகள் குறித்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


இரு நாடுகள் மத்தியிலான உறவுகளை மீண்டும் சரியான பாதையில் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடத்தயார் என தூதுவர் தெரிவித்துள்ளார்.




இந்த மாதம் இரு நாடுகளின் மத்தியில் உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 50வருடங்களாவதை சீன தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கடந்த சில வருடங்களாக உறவுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் துரதிஸ்டவசமானவை என தெரிவித்துள்ள சீன தூதுவர் உறவுகள் பாதிக்கப்பட்டமைக்கான காரணங்கள் கருத்துக்களிற்கு அப்பால் உறவுகள் பாதிக்கப்படுவது இரு நாடுகளினதும் நலன்களிற்கு உகந்த விடயமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த மாதம் பாலியில் இரு நாடுகளினதும் தலைவர்கள் மத்தியில் இடம்பெற்ற சந்திப்பு மிகவும் வெற்றிகரமானதாக அமைந்தது என குறிப்பிட்டு;ள்ள சீன தூதுவர் இந்த சந்திப்பு இரு நாடுகள் மத்தியிலான எதிர்கால உறவுகளிற்கான பாதையை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுடனான உறவுகளை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு செல்வதற்கு தயார்- சீனா அவுஸ்திரேலியாவுடனான உறவுகளை ஒத்துழைப்பின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு தயார் என அவுஸ்திரேலியாவிற்கான சீன தூதுவர் Xiao Qianதெரிவித்துள்ளார்.சிட்னியின் தொழில்நுட்ப பல்கலைகழகம் ஏற்பாடு செய்திருந்த அவுஸ்திரேலிய சீன உறவுகள் குறித்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இரு நாடுகள் மத்தியிலான உறவுகளை மீண்டும் சரியான பாதையில் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடத்தயார் என தூதுவர் தெரிவித்துள்ளார்.இந்த மாதம் இரு நாடுகளின் மத்தியில் உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 50வருடங்களாவதை சீன தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த சில வருடங்களாக உறவுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் துரதிஸ்டவசமானவை என தெரிவித்துள்ள சீன தூதுவர் உறவுகள் பாதிக்கப்பட்டமைக்கான காரணங்கள் கருத்துக்களிற்கு அப்பால் உறவுகள் பாதிக்கப்படுவது இரு நாடுகளினதும் நலன்களிற்கு உகந்த விடயமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.கடந்த மாதம் பாலியில் இரு நாடுகளினதும் தலைவர்கள் மத்தியில் இடம்பெற்ற சந்திப்பு மிகவும் வெற்றிகரமானதாக அமைந்தது என குறிப்பிட்டு;ள்ள சீன தூதுவர் இந்த சந்திப்பு இரு நாடுகள் மத்தியிலான எதிர்கால உறவுகளிற்கான பாதையை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement