• Nov 26 2024

இலங்கையில் வரலாறு ககாணாத வெப்பம்; பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு

Chithra / May 7th 2024, 9:11 am
image

  

இலங்கையில் வெப்பமான காலநிலை நிலவுவதால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உஷ்ண அலர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனால் மாணவர்களுக்கு பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், 

அதனை தவிர்க்க நீர் உள்ளிட்ட இயற்கை பானங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்வு அறைக்கு செல்லும் போது மாணவர்கள் தண்ணீர் போத்தலை எடுத்துச் செல்வது கட்டாயமாகும். தேர்வு எழுதும் போது தண்ணீர் அருந்துவது அவசியமாகும்.

தண்ணீர் அருந்துவதற்கு எடுக்கும் சில நிமிடங்களை வீணடிப்பதாக நினைக்கலாம், ஆனால் அதைவிட தேர்வு காலம் முழுவதும் ஆரோக்கியமாக தேர்வை எதிர்கொள்ளும் திறனைப் பேண வேண்டும்.

இந்த நாட்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இளநீர்,சூப், கஞ்சி, பழச்சாறு போன்றவற்றை அருந்த வேண்டும். நீரிழப்பு மற்றும் வெப்ப அதிர்ச்சியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

எனவே இயற்கை திரவங்களை தவிர்த்து செயற்கை திரவங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கையில் வரலாறு ககாணாத வெப்பம்; பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு   இலங்கையில் வெப்பமான காலநிலை நிலவுவதால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உஷ்ண அலர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.இதனால் மாணவர்களுக்கு பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், அதனை தவிர்க்க நீர் உள்ளிட்ட இயற்கை பானங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தேர்வு அறைக்கு செல்லும் போது மாணவர்கள் தண்ணீர் போத்தலை எடுத்துச் செல்வது கட்டாயமாகும். தேர்வு எழுதும் போது தண்ணீர் அருந்துவது அவசியமாகும்.தண்ணீர் அருந்துவதற்கு எடுக்கும் சில நிமிடங்களை வீணடிப்பதாக நினைக்கலாம், ஆனால் அதைவிட தேர்வு காலம் முழுவதும் ஆரோக்கியமாக தேர்வை எதிர்கொள்ளும் திறனைப் பேண வேண்டும்.இந்த நாட்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இளநீர்,சூப், கஞ்சி, பழச்சாறு போன்றவற்றை அருந்த வேண்டும். நீரிழப்பு மற்றும் வெப்ப அதிர்ச்சியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.எனவே இயற்கை திரவங்களை தவிர்த்து செயற்கை திரவங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement