• Nov 19 2024

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

Anaath / Aug 11th 2024, 4:07 pm
image

புத்தளம் - கற்பிட்டி வடக்கு எல்லைப்பகுதியின் குதிரமலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று டிங்கி இயந்திர படகுகளில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று (10) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட இலங்கை கடலோர காவல்படையின் விஷேட ரோந்து கப்பலில் கடற்படையினர் குறித்த பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது, சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று டிங்கி இயந்திர படகுகளை சோதனைக்கு உட்படுத்திய போது அதில் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த மூன்று டிங்கி இயந்திர படகுகளிலும் 62 உர மூடைகளில்  அடைக்கப்பட்ட 2068 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 இற்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் இவர்கள் கற்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

அத்துடன், பீடி இலைகள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று டிங்கி இயந்திர படகுகளும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 2068 கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய 62 உரமூடைகளையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 6 பேருடன் மூன்று டிங்கி இயந்திர படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு புத்தளம் - கற்பிட்டி வடக்கு எல்லைப்பகுதியின் குதிரமலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று டிங்கி இயந்திர படகுகளில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று (10) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.மேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட இலங்கை கடலோர காவல்படையின் விஷேட ரோந்து கப்பலில் கடற்படையினர் குறித்த பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதன் போது, சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று டிங்கி இயந்திர படகுகளை சோதனைக்கு உட்படுத்திய போது அதில் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.குறித்த மூன்று டிங்கி இயந்திர படகுகளிலும் 62 உர மூடைகளில்  அடைக்கப்பட்ட 2068 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 இற்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் இவர்கள் கற்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.அத்துடன், பீடி இலைகள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று டிங்கி இயந்திர படகுகளும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 2068 கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய 62 உரமூடைகளையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 6 பேருடன் மூன்று டிங்கி இயந்திர படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement