நாட்டு மக்களுக்கு விநியோகிப்பதற்காக உணவு ஆணையாளர் திணைக்களத்திற்கு சொந்தமான வெயங்கொட களஞ்சியசாலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, பேரீச்சம்பழம் உள்ளிட்ட 1.5 மில்லியன் கிலோகிராம் உணவுப் பொருட்கள் காலாவதியாகி இருப்பதாகவும் அவை நுகர்வுக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் உலக உணவுத் திட்டத்தின் கீழ் மேற்படி உணவுப் பொருட்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளன.
உணவு ஆணையாளர் திணைக்களத்திற்கு சொந்தமான வெயங்கொடை மாவட்ட தானியக் களஞ்சியத்திற்காக, 28,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட 16 களஞ்சியசாலைகள் உள்ளன, அவற்றில் 10 களஞ்சியசாலைகள் உணவு சேமிப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த ஆண்டு உலக உணவுத் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் கிலோகிராம் அரிசி, பருப்பு மற்றும் பேரீச்சம்பழம், ஏழைகள் மற்றும் பாடசாலைக் குழந்தைகளுக்கு இலவசமாக விநியோகிக்க அங்குள்ள மூன்று களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டன.
கசகஸ்தான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெறப்பட்ட உணவுப் பொருட்களை அதிகாரிகள் சரியான நேரத்தில் விநியோகிக்கத் தவறியதால், உணவுப் பொருட்கள் தற்போது காலாவதியாகிவிட்டன.
இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் மொஹமட் முனீர், பாராளுமன்ற உறுப்பினர் ருவான் மாபலகம மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழு வெயாங்கொட மாவட்ட தானிய களஞ்சியத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மனித பாவனைக்குத் தகுதியற்ற அரிசி, பருப்பு, பேரீச்சம்பழம் மீட்பு நாட்டு மக்களுக்கு விநியோகிப்பதற்காக உணவு ஆணையாளர் திணைக்களத்திற்கு சொந்தமான வெயங்கொட களஞ்சியசாலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, பேரீச்சம்பழம் உள்ளிட்ட 1.5 மில்லியன் கிலோகிராம் உணவுப் பொருட்கள் காலாவதியாகி இருப்பதாகவும் அவை நுகர்வுக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது.2023 ஆம் ஆண்டில் உலக உணவுத் திட்டத்தின் கீழ் மேற்படி உணவுப் பொருட்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளன. உணவு ஆணையாளர் திணைக்களத்திற்கு சொந்தமான வெயங்கொடை மாவட்ட தானியக் களஞ்சியத்திற்காக, 28,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட 16 களஞ்சியசாலைகள் உள்ளன, அவற்றில் 10 களஞ்சியசாலைகள் உணவு சேமிப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.கடந்த ஆண்டு உலக உணவுத் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் கிலோகிராம் அரிசி, பருப்பு மற்றும் பேரீச்சம்பழம், ஏழைகள் மற்றும் பாடசாலைக் குழந்தைகளுக்கு இலவசமாக விநியோகிக்க அங்குள்ள மூன்று களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டன.கசகஸ்தான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெறப்பட்ட உணவுப் பொருட்களை அதிகாரிகள் சரியான நேரத்தில் விநியோகிக்கத் தவறியதால், உணவுப் பொருட்கள் தற்போது காலாவதியாகிவிட்டன.இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் மொஹமட் முனீர், பாராளுமன்ற உறுப்பினர் ருவான் மாபலகம மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழு வெயாங்கொட மாவட்ட தானிய களஞ்சியத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.