• Sep 23 2024

இராகலையில் மலையிலிருந்து வீழ்ந்து தற்கொலை செய்த ஒருவரின் சடலம் மீட்பு...!samugammedia

Anaath / Nov 3rd 2023, 12:52 pm
image

Advertisement

இராகலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் இளைஞர் ஒருவர் பெற்றோரிடம் முரண்பட்டு சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலையிலிருந்து வீழ்ந்து  தற்கொலை செய்துள்ள  சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞரது நேற்று மாலை சடலம் மலையின் அடிவாரத்திலிருந்து சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இராகலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இராகலை ஹரஸ்பெத்த பகுதியில் வசித்த மலிந்த தில்ஷான் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட மலிங்க தில்ஷான் தாய், தந்தையரை தாக்கி சண்டையிட்டு, எங்காவது சென்று உயிரை மாய்த்துகொள்ளதாக கூறிவிட்டு நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.

இதையடுத்து குறித்த இளைஞனின் பெற்றோர் இராகலை காவல்நிலையத்திற்கு சென்று தனது மகன் மது அருந்திவிட்டு தங்களை தாக்கிவிட்டு கோபத்தில் வீட்டைவிட்டு சென்றதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேநேரத்தில் கோபத்தில் சென்ற மகன் வீட்டுக்கு வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று (02) மாலை இளைஞரின் வீட்டாருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று தர்பனா எல மலை அடிவாரத்தில் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த தகவலை பெற்றோர் இராகலை காவல்நிலையத்திற்கு அறவித்துள்ளனர். பின்னர் தர்பனா எல மலை அடிவாரத்திற்கு விரைந்த இராகலை காவல்துறையினர் அங்கு உடல் பாகங்கள் சிதைந்து உயிரிழந்த நிலையில் இளைஞரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

அதேநேரத்தில் உயிரிழந்திருப்பது தமது மகன் என பெற்றோரும் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

பின்னர் சம்பவம் தொடர்பில் வலப்பனை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ள காவல்துறையினர் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் தர்பனா எல மலை சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்டுள்ளது என தெரிவித்த காவல்துறையினர், மலை உச்சியிலிருந்து குறித்த இளைஞன் வீழ்ந்துள்ளமையினால் உடல் பாகங்கள் சிதைந்து மரணம் சம்பவித்திருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை இராகலை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இராகலையில் மலையிலிருந்து வீழ்ந்து தற்கொலை செய்த ஒருவரின் சடலம் மீட்பு.samugammedia இராகலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் இளைஞர் ஒருவர் பெற்றோரிடம் முரண்பட்டு சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலையிலிருந்து வீழ்ந்து  தற்கொலை செய்துள்ள  சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞரது நேற்று மாலை சடலம் மலையின் அடிவாரத்திலிருந்து சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இராகலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இராகலை ஹரஸ்பெத்த பகுதியில் வசித்த மலிந்த தில்ஷான் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்ட மலிங்க தில்ஷான் தாய், தந்தையரை தாக்கி சண்டையிட்டு, எங்காவது சென்று உயிரை மாய்த்துகொள்ளதாக கூறிவிட்டு நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.இதையடுத்து குறித்த இளைஞனின் பெற்றோர் இராகலை காவல்நிலையத்திற்கு சென்று தனது மகன் மது அருந்திவிட்டு தங்களை தாக்கிவிட்டு கோபத்தில் வீட்டைவிட்டு சென்றதாக முறைப்பாடு செய்துள்ளனர்.அதேநேரத்தில் கோபத்தில் சென்ற மகன் வீட்டுக்கு வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் இன்று (02) மாலை இளைஞரின் வீட்டாருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று தர்பனா எல மலை அடிவாரத்தில் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து குறித்த தகவலை பெற்றோர் இராகலை காவல்நிலையத்திற்கு அறவித்துள்ளனர். பின்னர் தர்பனா எல மலை அடிவாரத்திற்கு விரைந்த இராகலை காவல்துறையினர் அங்கு உடல் பாகங்கள் சிதைந்து உயிரிழந்த நிலையில் இளைஞரின் சடலத்தை மீட்டுள்ளனர்.அதேநேரத்தில் உயிரிழந்திருப்பது தமது மகன் என பெற்றோரும் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.பின்னர் சம்பவம் தொடர்பில் வலப்பனை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ள காவல்துறையினர் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.அத்துடன் தர்பனா எல மலை சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்டுள்ளது என தெரிவித்த காவல்துறையினர், மலை உச்சியிலிருந்து குறித்த இளைஞன் வீழ்ந்துள்ளமையினால் உடல் பாகங்கள் சிதைந்து மரணம் சம்பவித்திருப்பதாக தெரிவித்தனர்.மேலும் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை இராகலை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement