• Jul 04 2024

475 புதிய வைத்தியர்கள் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு - சுகாதார அமைச்சு நடவடிக்கை

Chithra / Jul 2nd 2024, 3:51 pm
image

Advertisement

 

475 புதிய வைத்தியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சியினை ஆரம்பிப்பதற்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று(01) கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இவ்வாறு நியமனம் கிடைக்கப்பெற்ற புதிய வைத்தியர்கள் நாடு பூராகவும் உள்ள 68 அரசாங்க வைத்தியசாலைகளில் ஒரு வருட பயிற்சிக்காக இணைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டு வைத்தியம் பீடங்களில் 05 வருட காலம் கல்வி செயற்பாடுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த  வைத்தியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கும் சுகாதார அமைச்சரின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஒரு வருட கால மட்டுப்படுத்த பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் வைத்தியர்கள் இலங்கை மருத்துவ சங்கத்தில் முழுமையான பதிவிற்கு உட்படுத்தப்பட்டு தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

475 புதிய வைத்தியர்கள் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு - சுகாதார அமைச்சு நடவடிக்கை  475 புதிய வைத்தியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சியினை ஆரம்பிப்பதற்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று(01) கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.இவ்வாறு நியமனம் கிடைக்கப்பெற்ற புதிய வைத்தியர்கள் நாடு பூராகவும் உள்ள 68 அரசாங்க வைத்தியசாலைகளில் ஒரு வருட பயிற்சிக்காக இணைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.நாட்டு வைத்தியம் பீடங்களில் 05 வருட காலம் கல்வி செயற்பாடுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த  வைத்தியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கும் சுகாதார அமைச்சரின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.ஒரு வருட கால மட்டுப்படுத்த பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் வைத்தியர்கள் இலங்கை மருத்துவ சங்கத்தில் முழுமையான பதிவிற்கு உட்படுத்தப்பட்டு தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement