• May 19 2024

ஐரோப்பாவின் 15 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு..!வெளியான காரணம்..! samugammedia

Tamil nila / Jul 15th 2023, 9:31 pm
image

Advertisement

ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தெற்கு ஐரோப்பாவில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாகமே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அந்த அடிப்படையில்,  இத்தாலியின் ரோம், ப்ளோரன்ஸ் மற்றும் போல்க்கானா போன்ற  15 நகரங்களுக்கே இவ்வாறு  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அது மட்டுமன்றி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளும்  அதிகளவான பாதிப்பை எதிர்கொள்ள கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஆகவே, குறித்த பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அவதானத்துடன் செயற்படுமாறு  கோரப்பட்டுள்ளது. 

அதனுடன், முதியோர்கள் மற்றும் சிறுவர்களை வெப்பம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கும் மேலாக, காற்று அதிகரித்து வீசும் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படுவதற்கான வாய்ப்பு  உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவின் 15 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு.வெளியான காரணம். samugammedia ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ஐரோப்பாவில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாகமே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்,  இத்தாலியின் ரோம், ப்ளோரன்ஸ் மற்றும் போல்க்கானா போன்ற  15 நகரங்களுக்கே இவ்வாறு  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது மட்டுமன்றி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளும்  அதிகளவான பாதிப்பை எதிர்கொள்ள கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே, குறித்த பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அவதானத்துடன் செயற்படுமாறு  கோரப்பட்டுள்ளது. அதனுடன், முதியோர்கள் மற்றும் சிறுவர்களை வெப்பம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும்  அறிவிக்கப்பட்டுள்ளது.இவற்றுக்கும் மேலாக, காற்று அதிகரித்து வீசும் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படுவதற்கான வாய்ப்பு  உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement