கொள்கலன் அனுமதி மோசடி குறித்து விசாரித்த குழுவின் அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த இன்று சபையில் தெரிவித்தார்.
அறிக்கை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதன் மீதான விவாதம் நடத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.
சோதனைகளின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியிருந்தார்.
இதன்போது அவர் தெரிவிக்கையில்,
சோதனைகளின்றி விடுவிக்கப்பட்ட சிவப்புகொள்கலன்கள் தொடர்பான அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த சபைக்கு சமர்பித்துவிட்டார்.
அந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு பல விடயங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசாங்கம் இந்த அறிக்கையை முன்வைக்காமல் இருக்கின்றது. அது உங்களுடைய பொறுப்பு.
அடுத்ததாக சமூகத்தில் பேசப்படுகின்ற விடயம் இந்த சம்பவத்துக்குப் பின்னால் ஒரு சூத்திரதாரி இருப்பார் என்பது. அது உண்மையான? உண்மையெனில் அதனைக் கண்டறியவேண்டும். ஆகவேதான் இங்கு நாங்கள் கேள்விகளை எழுப்புகின்றோம்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் அனில் ஜெயந்த,
அந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படவேண்டும். உங்கள் உறுப்பினர் சமூக வலைதள அறிக்கையை தான் முன்வைத்துள்ளார். அதற்கு எம்மால் பதிலளிக்கமுடியாது என பதிலளித்திருந்தார்.
சோதனைகளின்றி விடுவிக்கப்பட்ட சிவப்பு கொள்கலன்கள்; கேள்வியெழுப்பிய சஜித்தோடு அமைச்சர் வாக்குவாதம் கொள்கலன் அனுமதி மோசடி குறித்து விசாரித்த குழுவின் அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த இன்று சபையில் தெரிவித்தார்.அறிக்கை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதன் மீதான விவாதம் நடத்தப்படலாம் என்றும் அவர் கூறினார். சோதனைகளின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியிருந்தார். இதன்போது அவர் தெரிவிக்கையில்,சோதனைகளின்றி விடுவிக்கப்பட்ட சிவப்புகொள்கலன்கள் தொடர்பான அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த சபைக்கு சமர்பித்துவிட்டார். அந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு பல விடயங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசாங்கம் இந்த அறிக்கையை முன்வைக்காமல் இருக்கின்றது. அது உங்களுடைய பொறுப்பு. அடுத்ததாக சமூகத்தில் பேசப்படுகின்ற விடயம் இந்த சம்பவத்துக்குப் பின்னால் ஒரு சூத்திரதாரி இருப்பார் என்பது. அது உண்மையான உண்மையெனில் அதனைக் கண்டறியவேண்டும். ஆகவேதான் இங்கு நாங்கள் கேள்விகளை எழுப்புகின்றோம். இதற்குப் பதிலளித்த அமைச்சர் அனில் ஜெயந்த,அந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படவேண்டும். உங்கள் உறுப்பினர் சமூக வலைதள அறிக்கையை தான் முன்வைத்துள்ளார். அதற்கு எம்மால் பதிலளிக்கமுடியாது என பதிலளித்திருந்தார்.