• Apr 08 2025

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை பூச்சியமாக்க வேண்டும்! ரவி யோசனை

Chithra / Apr 7th 2025, 9:38 am
image

 

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு சுங்கவரி பூச்சியமாக குறைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அமெரிக்காவுடன் நமக்கு பெரிதாக வர்த்தக சிக்கல்கள் இருந்ததில்லை. அமெரிக்காவுக்கு நன்றி கூற வேண்டும். ஆனால் தற்போது டொனால்ட் ட்ரம்பின் அரசியல் போக்கினால் சில சிக்கல்கள் உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தகத்தில், நாங்கள் இறக்குமதி செய்யும் அளவு அதிகமாக காணப்படுவதாகவும் அந்தப் பொருட்களை வேறு நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தீர்வுகளை எட்ட முயற்சிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

சுங்க வரிக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும், ஒரே நிலையான வரி கொள்கை பொருத்தமாகாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை பூச்சியமாக்க வேண்டும் ரவி யோசனை  அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு சுங்கவரி பூச்சியமாக குறைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதுவரை அமெரிக்காவுடன் நமக்கு பெரிதாக வர்த்தக சிக்கல்கள் இருந்ததில்லை. அமெரிக்காவுக்கு நன்றி கூற வேண்டும். ஆனால் தற்போது டொனால்ட் ட்ரம்பின் அரசியல் போக்கினால் சில சிக்கல்கள் உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவுடனான வர்த்தகத்தில், நாங்கள் இறக்குமதி செய்யும் அளவு அதிகமாக காணப்படுவதாகவும் அந்தப் பொருட்களை வேறு நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தீர்வுகளை எட்ட முயற்சிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.சுங்க வரிக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும், ஒரே நிலையான வரி கொள்கை பொருத்தமாகாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement