• May 11 2024

தமிழ் தேசியத்தின் வேட்கையை குறைப்பது தற்போது அரசாங்கத்திற்கு இலகுவாகிவிட்டது – ஏன்? - புளொட் தலைவர் விளக்கம்! samugammedia

Tamil nila / Apr 9th 2023, 5:11 pm
image

Advertisement

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் தற்போது பிரிந்து நிற்கின்ற நிலையில் சிங்கள தலைமைகள் தமது விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு தமிழர் தரப்பை இலகுவாக கையாள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இவ்வாறு சிங்கள தலைமைகள் தமிழ் தரப்பை இலகுவாக கையாண்டால் தமிழ் தேசியத்தின் வேட்கை குறைந்து விடும் என்றும் த.சித்தார்த்தன் குறிப்பிடுகின்றார்.

கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் 5 பேரும் புளொட்டும் ரெலோவுமாக 4 பேர் வெற்றி பெற்றிருந்ததாக கூட்டத்தில் நினைவுபடுத்தியிருந்தார்.

தமிழரசு கட்சியுடன் இணைந்திருப்பதால் மாத்திரமே தமக்கு ஆசனங்கள் கிடைப்பதாக சிலர் நினைப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒன்று வருவதற்கு முன்னரே தாம் தனிக்கட்சியாக போட்டியிட்டிருந்தாக மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற ஆசனங்களையோ அல்லது பிரதேச சபைகளை கைப்பற்றுவது என்பது புளொட்டின் நோக்கம் இல்லை என்றும் தமிழ் மக்களின் இறுக்கமான ஒற்றுமையினை பேணி பிரச்சனைக்கான தீர்வு நோக்கி முன்னேறுவதே தமது மிகமுக்கிய நோக்கம் என த.சித்தார்த்தன் மேலும் தெரிவிக்கின்றார்.

தமிழ் தேசியத்தின் வேட்கையை குறைப்பது தற்போது அரசாங்கத்திற்கு இலகுவாகிவிட்டது – ஏன் - புளொட் தலைவர் விளக்கம் samugammedia தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் தற்போது பிரிந்து நிற்கின்ற நிலையில் சிங்கள தலைமைகள் தமது விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு தமிழர் தரப்பை இலகுவாக கையாள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இவ்வாறு சிங்கள தலைமைகள் தமிழ் தரப்பை இலகுவாக கையாண்டால் தமிழ் தேசியத்தின் வேட்கை குறைந்து விடும் என்றும் த.சித்தார்த்தன் குறிப்பிடுகின்றார்.கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் 5 பேரும் புளொட்டும் ரெலோவுமாக 4 பேர் வெற்றி பெற்றிருந்ததாக கூட்டத்தில் நினைவுபடுத்தியிருந்தார்.தமிழரசு கட்சியுடன் இணைந்திருப்பதால் மாத்திரமே தமக்கு ஆசனங்கள் கிடைப்பதாக சிலர் நினைப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒன்று வருவதற்கு முன்னரே தாம் தனிக்கட்சியாக போட்டியிட்டிருந்தாக மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்ற ஆசனங்களையோ அல்லது பிரதேச சபைகளை கைப்பற்றுவது என்பது புளொட்டின் நோக்கம் இல்லை என்றும் தமிழ் மக்களின் இறுக்கமான ஒற்றுமையினை பேணி பிரச்சனைக்கான தீர்வு நோக்கி முன்னேறுவதே தமது மிகமுக்கிய நோக்கம் என த.சித்தார்த்தன் மேலும் தெரிவிக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement