• May 12 2024

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு: வெளியான புதிய அறிவிப்பு! samugammedia

raguthees / Apr 3rd 2023, 12:44 am
image

Advertisement

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களிலும், தொடர்ந்தும் விலை குறைவடையும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்த பொருட்களிலும், தட்டுப்பாடு இதுவரை ஏற்படவில்லை எனவும் பண்டிகைக்காலத்தில் அனைத்து பொருட்களும், தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெங்காயம், பருப்பு, கிழங்கு, சீனி, கோதுமை மா உள்ளிட்ட பொருட்களினதும் மொத்த விலை குறைவடைந்துள்ளது.

எனினும், அதன் நிவாரணத்தை வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களே மக்களுக்கு வழங்க வேண்டும் என அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு: வெளியான புதிய அறிவிப்பு samugammedia டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் நாட்களிலும், தொடர்ந்தும் விலை குறைவடையும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.அத்துடன், எந்த பொருட்களிலும், தட்டுப்பாடு இதுவரை ஏற்படவில்லை எனவும் பண்டிகைக்காலத்தில் அனைத்து பொருட்களும், தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.வெங்காயம், பருப்பு, கிழங்கு, சீனி, கோதுமை மா உள்ளிட்ட பொருட்களினதும் மொத்த விலை குறைவடைந்துள்ளது.எனினும், அதன் நிவாரணத்தை வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களே மக்களுக்கு வழங்க வேண்டும் என அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement