• Nov 25 2024

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு?

Chithra / Sep 26th 2024, 10:38 am
image

 

முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலை குறைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த காலங்களில் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை தற்போது 28 முதல் 35 ரூபா வரை உள்ளதாக அதன் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதன் அனுகூலத்தை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்துள்ளார்.

தேவையுடன் ஒப்பிடுகையில் வரத்து அதிகரிப்பு காரணமாக சந்தையில் முட்டையின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

உற்பத்திச் செலவை விட முட்டையின் விலை குறைந்த விலைக்குக் குறைவடைந்துள்ளமை பிரச்சினையாக உள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு முட்டை 65 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் அதிக விலையில் இருந்த முட்டை விலை, தற்போது சந்தையில் மிகவும் குறைந்த விலைக்கு வந்துள்ளது.

தற்போது ஒரு முட்டையை 27 ரூபாவிற்கு வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடைகளில் விற்பனை செய்யப்படும் முட்டை தொடர்பான பொருட்களின் விலைகள் கடைகளில் தெளிவாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவ்வாறு செய்யாத வர்த்தகர்களுக்கு நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தையில் முட்டை ஒன்றின் விலை 28 முதல் 35 ரூபாய் வரை உள்ளதால், அதன் நிவாரணத்தை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு  முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலை குறைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.கடந்த காலங்களில் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை தற்போது 28 முதல் 35 ரூபா வரை உள்ளதாக அதன் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்துள்ளார்.அதன்படி, இதன் அனுகூலத்தை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்துள்ளார்.தேவையுடன் ஒப்பிடுகையில் வரத்து அதிகரிப்பு காரணமாக சந்தையில் முட்டையின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.உற்பத்திச் செலவை விட முட்டையின் விலை குறைந்த விலைக்குக் குறைவடைந்துள்ளமை பிரச்சினையாக உள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு முட்டை 65 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் அதிக விலையில் இருந்த முட்டை விலை, தற்போது சந்தையில் மிகவும் குறைந்த விலைக்கு வந்துள்ளது.தற்போது ஒரு முட்டையை 27 ரூபாவிற்கு வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை, கடைகளில் விற்பனை செய்யப்படும் முட்டை தொடர்பான பொருட்களின் விலைகள் கடைகளில் தெளிவாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.அவ்வாறு செய்யாத வர்த்தகர்களுக்கு நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.சந்தையில் முட்டை ஒன்றின் விலை 28 முதல் 35 ரூபாய் வரை உள்ளதால், அதன் நிவாரணத்தை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement