• Nov 21 2024

'ரீட் மாவத்தையின் நூற்றாண்டு விழா' சஞ்சிகை ஜனாதிபதியிடம் கையளிப்பு...!

Sharmi / Jul 3rd 2024, 3:46 pm
image

ரீட் மாவத்தையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அச்சிடப்பட்ட The Royal College Magazine “Celebrating 100 Years at Reid Avenue என்ற சஞ்சிகையின்  முதல் பிரதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்றையதினம் (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி  வைக்கப்பட்டது.

கொழும்பு ரோயல் கல்லூரி அதிபர் திலக் வத்துஹேவா, சிரேஷ்ட பிரதி அதிபர் எல்.டபிள்யூ.கே. சில்வா, உதவி அதிபர் எம்.ஏ.எம்.ரியாஸ், றோயல் கல்லூரி ஒன்றியச் செயலாளர் அருண சமரஜீவ, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், டபிள்யூ.வி.என்.பி.வேரகொட, மாணவர் தலைவர் டபிள்யூ.ஏ.எஸ்.எஸ்.வனசிங்க, சஞ்சிகை ஆசிரியர் சத்தில் எஸ். தர்மவர்தன மற்றும் றோயல் கல்லூரியின்  மாணவர் தலைவர்கள் மற்றும் பழைய மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கொழும்பு றோயல் கல்லூரி, ரீட் மாவத்தையில் நிறுவப்பட்டு நூறு வருடங்கள் பூர்த்தியாவதையிட்டு வௌியிடப்பட்ட இந்த சிறப்பு சஞ்சிகையில், பாடசாலையின் வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் பாடசாலையின் ஆரம்பம், ஒலிபரப்பு மற்றும் மரபுகள் ஆகியவையுடன் இங்கிருந்து உருவாகிய தலைவர்கள் பற்றிய  குறிப்புக்களும் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





'ரீட் மாவத்தையின் நூற்றாண்டு விழா' சஞ்சிகை ஜனாதிபதியிடம் கையளிப்பு. ரீட் மாவத்தையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அச்சிடப்பட்ட The Royal College Magazine “Celebrating 100 Years at Reid Avenue என்ற சஞ்சிகையின்  முதல் பிரதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்றையதினம் (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி  வைக்கப்பட்டது.கொழும்பு ரோயல் கல்லூரி அதிபர் திலக் வத்துஹேவா, சிரேஷ்ட பிரதி அதிபர் எல்.டபிள்யூ.கே. சில்வா, உதவி அதிபர் எம்.ஏ.எம்.ரியாஸ், றோயல் கல்லூரி ஒன்றியச் செயலாளர் அருண சமரஜீவ, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், டபிள்யூ.வி.என்.பி.வேரகொட, மாணவர் தலைவர் டபிள்யூ.ஏ.எஸ்.எஸ்.வனசிங்க, சஞ்சிகை ஆசிரியர் சத்தில் எஸ். தர்மவர்தன மற்றும் றோயல் கல்லூரியின்  மாணவர் தலைவர்கள் மற்றும் பழைய மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.கொழும்பு றோயல் கல்லூரி, ரீட் மாவத்தையில் நிறுவப்பட்டு நூறு வருடங்கள் பூர்த்தியாவதையிட்டு வௌியிடப்பட்ட இந்த சிறப்பு சஞ்சிகையில், பாடசாலையின் வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் பாடசாலையின் ஆரம்பம், ஒலிபரப்பு மற்றும் மரபுகள் ஆகியவையுடன் இங்கிருந்து உருவாகிய தலைவர்கள் பற்றிய  குறிப்புக்களும் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement