• Nov 28 2024

இரணைமடுக் குளத்தின் இடதுகரை நீர்விநியோக வாய்க்கால் சீரமைப்பு - பிரகாஷ்

Tharmini / Oct 17th 2024, 11:51 am
image

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் இடதுகரை நீர்விநியோக வாய்க்கால் சீரமைப்பு பணிகள் 35 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீபாசன குளமான இரணைமடு குளத்தின் முரசுமோட்டை, ஊரியான், உருத்திரபுரம், பெரிய பரந்தன் அகிய பிரதேசங்களுக்கான இடதுகரை நீர்விநியோக வாய்க்காலின் நீர்திறந்துவிடப்படும்.

துலுசுப் பகுதியல் ஏற்பட்டிருந்த நீர்க்கசிவினைத் தடுக்கும் வகையிலான சீரமைப்பு பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகள் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் 35 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, நீர்பாசன பொறியியலாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த சிறுபோக செய்கை அறுவடையின் பின்னர் குளத்தினுடைய குறித்த  புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன கிளிநொச்சி, திருவையாறு ஏற்று நீர்பாசன திட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் ஏனைய நீர்விநியோக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் குறித்த புணர்மைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதன் புனரமைப்பு பணிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவுறுத்தப்பட உள்ளதாகவும்  நீர்பாசனத்திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது

இரணைமடுக் குளத்தின் இடதுகரை நீர்விநியோக வாய்க்கால் சீரமைப்பு - பிரகாஷ் கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் இடதுகரை நீர்விநியோக வாய்க்கால் சீரமைப்பு பணிகள் 35 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீபாசன குளமான இரணைமடு குளத்தின் முரசுமோட்டை, ஊரியான், உருத்திரபுரம், பெரிய பரந்தன் அகிய பிரதேசங்களுக்கான இடதுகரை நீர்விநியோக வாய்க்காலின் நீர்திறந்துவிடப்படும். துலுசுப் பகுதியல் ஏற்பட்டிருந்த நீர்க்கசிவினைத் தடுக்கும் வகையிலான சீரமைப்பு பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகள் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் 35 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, நீர்பாசன பொறியியலாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.கடந்த சிறுபோக செய்கை அறுவடையின் பின்னர் குளத்தினுடைய குறித்த  புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன கிளிநொச்சி, திருவையாறு ஏற்று நீர்பாசன திட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் ஏனைய நீர்விநியோக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் குறித்த புணர்மைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் புனரமைப்பு பணிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவுறுத்தப்பட உள்ளதாகவும்  நீர்பாசனத்திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement