• Nov 28 2024

'அற்றார் அழிபசி தீர்த்தல்'...! தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் விநியோகம்...!samugammedia

Sharmi / Jan 18th 2024, 2:02 pm
image

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் 'அற்றார் அழிபசி தீர்த்தல்' என்ற திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது.

இந்நிலையில்  'பகிர்ந்துண்டு வாழ்வோம்' என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டம் நேற்றையதினம்(17) சண்டிலிப்பாய், சங்கானை மற்றும் உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது.

பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  தெரிவுசெய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலருணவுகள் அடங்கிய பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட தொழில்வாய்ப்பு இழப்புகளைத் தொடர்ந்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழுகின்ற மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனைக் கருத்திற்கொண்டு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கொரோனாப் பேரிடரின்போது ஆரம்பித்த 'அற்றார் அழிபசி தீர்த்தல்' திட்டத்தைக் கைவிடாது தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



'அற்றார் அழிபசி தீர்த்தல்'. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் விநியோகம்.samugammedia தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் 'அற்றார் அழிபசி தீர்த்தல்' என்ற திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. இந்நிலையில்  'பகிர்ந்துண்டு வாழ்வோம்' என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டம் நேற்றையதினம்(17) சண்டிலிப்பாய், சங்கானை மற்றும் உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது.பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  தெரிவுசெய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலருணவுகள் அடங்கிய பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட தொழில்வாய்ப்பு இழப்புகளைத் தொடர்ந்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழுகின்ற மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கொரோனாப் பேரிடரின்போது ஆரம்பித்த 'அற்றார் அழிபசி தீர்த்தல்' திட்டத்தைக் கைவிடாது தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement