• Jan 05 2025

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

Sharmi / Dec 20th 2024, 2:50 pm
image

நெடுந்தீவு கடற்பரப்பில் இம்மாதம் 8ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 8 பேருக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களது வழக்கு இன்றையதினம்(20) ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் சிறைச்சாலை அதிகாரிகளால் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், அவர்கள் எண்மரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றத்தின் பதில் நீதிவான் சாளினி ஜெயபாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு. நெடுந்தீவு கடற்பரப்பில் இம்மாதம் 8ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 8 பேருக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களது வழக்கு இன்றையதினம்(20) ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போது, கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் சிறைச்சாலை அதிகாரிகளால் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இந்நிலையில், அவர்கள் எண்மரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றத்தின் பதில் நீதிவான் சாளினி ஜெயபாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement