சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் செய்வதற்கு தடைவிதிப்பதற்கு சம்பூர் பொலிஸார் கடந்த 12 ஆம் பெற்றுக் கொண்ட நீதிமன்ற தடையுத்தரவு இன்று வியாழக்கிழமை மூதூர் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் மூதூர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பிரேரணை விண்ணப்பம் செய்து வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. செய்த இவ்வழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆலோசகர் சட்டத்தரணி சுகாஷ் மற்றும் 10 முஸ்லீம் சட்டத்தரணிகள் இந்த தடையை நீக்குமாறு மூதூர் நீதிவான் நீதிமன்றில் இன்று ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பூர் போலீஸ் பிரிவில் உள்ள பகுதிகளில் பெயர் குறிப்பிடப்பட்ட நான்கு நபர்களும், ஏனையவர்களும் நினைவேந்தல் செய்வதற்கு தடை விதிக்குமாறு இம்மாதம் 12 ஆம் திகதி சம்பூர் பொலிஸார் நீதிமன்ற தடையை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏற்கனவே சம்பூர் பொலிஸாரால் பெறப்பட்டிருந்த நீதிமன்ற தடை உத்தரவை மீறியதாக சம்பூர்-சேனையூர் பகுதியில் நால்வர் சில தினங்களுக்கு முன்னர் Iccpr சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தடையுத்தரவு நீக்கப்பட்டதன் மூலம் சம்பூர்-சேனையூர் பகுதியில் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கஞ்சி காய்ச்சும் நிகழ்வில் சட்ட மீறல்கள் இடம்பெற்றால் உரிய சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இன்றையதினம் நீதிமன்ற நடவடிக்கையை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் வருகை தந்திருந்தார்.
மூதூரிலே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை நீக்கம் சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் செய்வதற்கு தடைவிதிப்பதற்கு சம்பூர் பொலிஸார் கடந்த 12 ஆம் பெற்றுக் கொண்ட நீதிமன்ற தடையுத்தரவு இன்று வியாழக்கிழமை மூதூர் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளது.சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் மூதூர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பிரேரணை விண்ணப்பம் செய்து வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. செய்த இவ்வழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆலோசகர் சட்டத்தரணி சுகாஷ் மற்றும் 10 முஸ்லீம் சட்டத்தரணிகள் இந்த தடையை நீக்குமாறு மூதூர் நீதிவான் நீதிமன்றில் இன்று ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.சம்பூர் போலீஸ் பிரிவில் உள்ள பகுதிகளில் பெயர் குறிப்பிடப்பட்ட நான்கு நபர்களும், ஏனையவர்களும் நினைவேந்தல் செய்வதற்கு தடை விதிக்குமாறு இம்மாதம் 12 ஆம் திகதி சம்பூர் பொலிஸார் நீதிமன்ற தடையை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஏற்கனவே சம்பூர் பொலிஸாரால் பெறப்பட்டிருந்த நீதிமன்ற தடை உத்தரவை மீறியதாக சம்பூர்-சேனையூர் பகுதியில் நால்வர் சில தினங்களுக்கு முன்னர் Iccpr சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இன்றைய தடையுத்தரவு நீக்கப்பட்டதன் மூலம் சம்பூர்-சேனையூர் பகுதியில் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கஞ்சி காய்ச்சும் நிகழ்வில் சட்ட மீறல்கள் இடம்பெற்றால் உரிய சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இன்றையதினம் நீதிமன்ற நடவடிக்கையை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் வருகை தந்திருந்தார்.