• May 01 2024

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை...! சஜித்தின் செயல் வருத்தமளிக்கின்றது...!அமைச்சர் பிரசன்ன...!samugammedia

Sharmi / Sep 19th 2023, 2:28 pm
image

Advertisement

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்ற நூலகத்திற்கு வழங்கியுள்ள போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் அதனை ஆராயாதமை வருத்தமளிப்பதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். .

அதேவேளை நாட்டை பாதிக்கும் பாரதூரமான விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கருத்துக்கு பதிலளித்த சஜித் பிரேமதாச,

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை வழங்குமாறு எனது அலுவலகத்தின் ஊடாக பாராளுமன்ற நூலகத்திடம் கோரிக்கை விடுத்தேன். இது இரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது. இரண்டாம் தொகுதியின் சில பகுதிகள் கொடுக்க முடியாது. தேவைப்பட்டால் நூலகத்திற்கு வந்து ஆலோசிக்கச் சொன்னார்கள்.  இது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் கிடைத்த ஆலோசனையாகும்.

இப்போதும் அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறோம். நாடாளுமன்ற பொதுச் செயலாளரின் மேற்பார்வையில் தானே நான் இந்த நாடாளுமன்றத்தில் பணியாற்ற வேண்டும். இப்போதும் இந்த தாக்குதல் குறித்த உண்மை வெளிவர வேண்டும். எனவே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை எனக்கு மட்டுமன்றி 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். கைகளில் இரத்தக் கறை உள்ளவர்கள் இதை மறைக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.




ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை. சஜித்தின் செயல் வருத்தமளிக்கின்றது.அமைச்சர் பிரசன்ன.samugammedia ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்ற நூலகத்திற்கு வழங்கியுள்ள போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் அதனை ஆராயாதமை வருத்தமளிப்பதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். .அதேவேளை நாட்டை பாதிக்கும் பாரதூரமான விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கருத்துக்கு பதிலளித்த சஜித் பிரேமதாச,ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை வழங்குமாறு எனது அலுவலகத்தின் ஊடாக பாராளுமன்ற நூலகத்திடம் கோரிக்கை விடுத்தேன். இது இரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது. இரண்டாம் தொகுதியின் சில பகுதிகள் கொடுக்க முடியாது. தேவைப்பட்டால் நூலகத்திற்கு வந்து ஆலோசிக்கச் சொன்னார்கள்.  இது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் கிடைத்த ஆலோசனையாகும்.இப்போதும் அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறோம். நாடாளுமன்ற பொதுச் செயலாளரின் மேற்பார்வையில் தானே நான் இந்த நாடாளுமன்றத்தில் பணியாற்ற வேண்டும். இப்போதும் இந்த தாக்குதல் குறித்த உண்மை வெளிவர வேண்டும். எனவே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை எனக்கு மட்டுமன்றி 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். கைகளில் இரத்தக் கறை உள்ளவர்கள் இதை மறைக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement