எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் திட்டமிடுவது தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சென்றிருந்தனர்.
வரவு செலவு திட்ட விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளுக்கு இடையூறு இல்லாமல் நிறைவேற்ற அனுமதிக்கும் வகையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்குமாறு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் ஆணைக்குழுவை வலியுறுத்தினர்.
அரசாங்கம் அதன் புகழ் குறைவதற்கு முன்னர் தேர்தலை நடத்த ஆர்வமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதன்போது தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் சம்பளம் வழங்கும் காலப்பகுதியே அரசாங்கம் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினை ஆகும்.
இது தேர்தலுக்கு முன்னரான வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதைச் சுட்டிக்காட்டக்கூடும் எனத் தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கத்துக்கு வாக்களித்த வாக்காளர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும்.
அரசாங்கத்தின் அழுத்தங்களுக்குச் செவிசாய்க்காமல் அதன் சுதந்திரத்தையும் நம்பகத்தன்மையையும் பராமரிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விஜயம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் திட்டமிடுவது தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சென்றிருந்தனர். வரவு செலவு திட்ட விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளுக்கு இடையூறு இல்லாமல் நிறைவேற்ற அனுமதிக்கும் வகையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்குமாறு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் ஆணைக்குழுவை வலியுறுத்தினர். அரசாங்கம் அதன் புகழ் குறைவதற்கு முன்னர் தேர்தலை நடத்த ஆர்வமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதன்போது தெரிவித்தார். அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் சம்பளம் வழங்கும் காலப்பகுதியே அரசாங்கம் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினை ஆகும். இது தேர்தலுக்கு முன்னரான வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதைச் சுட்டிக்காட்டக்கூடும் எனத் தெரிவித்தார். அத்துடன் அரசாங்கத்துக்கு வாக்களித்த வாக்காளர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும். அரசாங்கத்தின் அழுத்தங்களுக்குச் செவிசாய்க்காமல் அதன் சுதந்திரத்தையும் நம்பகத்தன்மையையும் பராமரிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.