• Feb 20 2025

வறட்சியான காலநிலை – நீரின் பயன்பாடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Chithra / Feb 18th 2025, 4:04 pm
image

 

தற்போது நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நாட்களில் மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீர் நிலைகளின் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், வெப்பம் காரணமாக மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கு சம அளவில் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

எனவே தேவையான அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நேரத்தில் பாதுகாப்பான குடிநீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மேற்படி சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.


வறட்சியான காலநிலை – நீரின் பயன்பாடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை  தற்போது நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்த நாட்களில் மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீர் நிலைகளின் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், வெப்பம் காரணமாக மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.குடிநீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கு சம அளவில் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.எனவே தேவையான அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.இந்த நேரத்தில் பாதுகாப்பான குடிநீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மேற்படி சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement